நெடுவாசலில் காவிரி உரிமை மீட்புக் குழு!
நெடுவாசலில் காவிரி உரிமை மீட்புக் குழு!
புதுக்கோட்டை மாவட்டம் - நெடுவாசலில், இந்திய அரசின் ஐட்ரோ கார்பன்
திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் எழுச்சிமிகுப் போராட்டத்திற்கு
காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, தோழர் பழ. இராசேந்திரன் உள்ளிட்டோர் இக்குழுவில் வந்தனர்.
போராட்டப் பந்தலில், தோழர் பெ. மணியரசன் அவர்கள் போராட்டத்தை ஆதரித்தும், மக்களை ஊக்குவித்தும் உரையாற்றினார். அதன்பின், ஓ.என்.ஜி.சி. சோதனைக் குழாய் பதித்துள்ள இடத்தை தோழர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து போராட்டம் வீரியத்துடன் நடைபெற்று வருகின்றது.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
இணையம்: www.kaveriurimai.com
முகநூல்: www.facebook.com/kaveriurimai
பேச: 94432 74002, 76670 77075
முகநூல்: www.facebook.com/kaveriurimai
பேச: 94432 74002, 76670 77075


Leave a Comment