நடிகர் சத்தியராஜ் அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கும் - தமிழ் இன உணர்ச்சிக்கும் பாராட்டுகள்! பெ. மணியரசன் அறிக்கை!
நடிகர் சத்தியராஜ் அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கும் - தமிழ் இன உணர்ச்சிக்கும் பாராட்டுகள்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
நடிகர் சத்தியராஜ் அவர்கள் பொறுப்புள்ள தமிழ்ச்சான்றோர் என்பதை நிலைநாட்டியுள்ளார்.
ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “பாகுபலி–2” திரைப்படத்தின், தயாரிப்பாளர், இயக்குநர், கலைஞர்கள், தொழில்நுட்பப் பிரிவினர் என அனைவரின் உழைப்பு, நிதிச்சுமை உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்து திரு. சத்தியராஜ் அவர்கள் கன்னட மக்களிடம் தன் “வருத்தத்தை”த் தெரிவித்துள்ளார்.
அத்துடன் “தொடர்ந்து தமிழர் உரிமையின் பக்கம் நிற்பேன்” என்றும், திரு. சத்தியராஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நம் அன்பு உடன்பிறப்பு சத்தியராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
கன்னட இனவெறி காவிரி நீரை மட்டும் தடுக்கவில்லை, தமிழர்களின் பல்வேறு வாழ்வுரிமைகளையும் தடுக்கிறது என்பதைத் தமிழர்கள் புரிந்து கொண்டு செயல்படுவோம்!
இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com
Leave a Comment