“கதிராமங்கலம் கதறல்” - ஆவணப்படம். இன்னும் சில நாட்களில் வெளியாகிறது..!

“கதிராமங்கலம் கதறல்” - ஆவணப்படம். இன்னும் சில நாட்களில் வெளியாகிறது..!
காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி!

அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, “கதிராமங்கலம் கதறல்” என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டுள்ளன.
ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர் - 1965” படத்தை பன்மைவெளி வெளியிட்டது. இதனையடுத்து, காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி.யின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் முதல் ஆவணப்படமாக இந்தப் படத்தை பன்மைவெளி வெளியிடுகின்றது.

“மொழிப்போர் - 1965” ஆவணப்படத்தின் இயக்குநர் க. அருணபாரதி, “கதிராமங்கலம் கதறல்” படத்தை இயக்கியுள்ளார். கவிஞர் இஞ்சக்காடு பாலச்சந்திரனின் புகழ் பெற்ற “இனி வருமொரு தலைமுறை” பாடலின் தமிழ் வடிவம் படத்தில் இடம்பெற்றுள்ளது. குடந்தை அன்பு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

பன்மைவெளி வெளியீடு

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/panmaiveli
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Related

பன்மைவெளி 1159322849680122985

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item