கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து திருவாரூரில் இன்று மாலை ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து திருவாரூரில் இன்று மாலை ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலத்தில் நேற்று காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனங்களைக் கண்டித்து, இன்று (01.07.2017) மாலை, திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
திருவாரூர் பேருந்து நிலையம் எதிரில், இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று கதிராமங்கலத்தில் நடந்தது, இன்று நம் பகுதியிலும் நடக்கலாம். எனவே, வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய இவ் ஆர்ப்பாட்டத்தில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
Leave a Comment