கதிராமங்கலம் ஒடுக்குமுறையைக் கண்டித்து நாகை மாவட்டம் - வேதாரணியத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!

கதிராமங்கலம் ஒடுக்குமுறையைக் கண்டித்து நாகை மாவட்டம் - வேதாரணியத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்து, நாகை மாவட்டம் வேதாரணியத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று (03.07.2017) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரணியம், ஆயக்காரன்புலம் கடைவீதியில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. இராஜன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திரு. முருகையன், உழவர் சங்கத் தலைவர் திரு. கந்தசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கதிராமங்கலத்தில் எரிவாயு எடுப்பது தொடர்பான பிரச்னையில், வன்முறை ஏற்படும் அளவுக்கு பணிகளில் கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்பிரச்னையில் பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையை கண்டித்தும், போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் எண்ணெய்க் கிணறு அமைப்பது, எரிவாயு எடுப்பது உள்ளிட்ட ஓ.என்.ஜி.சி.யின் அனைத்து முயற்சிகளையும் கைவிட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

Related

வேதாரணியம் 4484255934992697980

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item