ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓசூரில் நாளை (03.12.2017) ....தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “கல்வி அரசியல்" நூல் வெளியீடு!


 ஓசூரில் நாளை (03.12.2017) ....தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “கல்வி அரசியல்" நூல் வெளியீடு!



மாற்றுக் கல்வி குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதியுள்ள “கல்வி அரசியல்” நூல், நாளை (03.12.2017) ஓசூரில் வெளியிடப்படுகின்றது.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், நாளை மாலை 4.50 மணிக்கு, ஓசூர் - சாந்தி நகர் - அசோக்பவன் மாடியிலுள்ள மை செலிபிரேசன் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, பேராசிரியர் இரா. கிருட்டிணமூர்த்தி தலைமை தாங்குகிறார். த.க.இ.பே. ஓசூர் செயலாளர் தோழர் முத்துவேலு வரவேற்கிறார். த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி ஒருங்கிணைக்கிறார்.

சென்னை இலயோலா கல்லூரி முதல்வர் முனைவர் சேவியர் ஆரோக்கியசாமி, நூலை வெளியிட்டு கருத்துரையாற்றுகிறார். மருத்துவர் தமிழ்த்திரு. ஜான்திமோதி, கல்வியாளர் பேராசிரியர் வணங்காமுடி, அறம் இலக்கிய அமைப்புத் தலைவர் திரு. அறம் கிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொதுச் செயலாளர் முனைவர் சேதுராமன், தொழில் முனைவர் தமிழ்த்திரு. செந்தில் ஆகியோர் நூல்படி பெறுகின்றனர்.

மக்கள் கல்விக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. பிரிட்டோ ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார். நூலாசிரியர் தோழர் கி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றுகிறார்.

தோழர் வீ. முருகையன் நன்றி கூறுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், மாற்றுக் கல்வி ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
இனையம்: www.kannottam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.