“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங்கக்கூட்டம்!

“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங்கக்கூட்டம்!
மிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், இன்று (04.03.2018) குடந்தையில் “வரலாற்று வழியில் இலக்கியம்” என்ற தலைப்பிலான சொற்பொழிவு - அரங்கக்கூட்டம் நடைபெறுகின்றது.

குடந்தை நாடார் திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் திரு. சு.சி. வீரக்குந்தவை அவர்களின் ஆடல் நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்நிகழ்வுக்கு, த.க.இ.பே. திரு. அரங்க. பொன்முடி தலைமை தாங்குகிறார். திரு. க. கார்த்திக் இமயம் வரவேற்கிறார். திருவாளர்கள் கி. சேரமான், உ. அருளானந்தம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரச், த.க.இ.பே. பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர்கள் திரு. பெ. பூங்குன்றன், பாவலர் நா. இராசாரகுநாதன் ஆகியோர் “வரலாற்று வழியில் இலக்கியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகின்றனர். தோழர் ரெ. அன்பழகன் நன்றி கூறுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.

பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
இனையம்: www.kannotam.com

Related

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை 4405415402249968595

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item