காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது முயற்சி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது முயற்சி.
தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு, தமிழர் கலை இலக்கிய பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார், அவர்களை பல்லாவரத்தில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய அதிவிரைவு படையினர் மண்டபத்திற்கு வந்துள்ளனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை தவிர, மற்றவர்களை வெளியேற்ற போலீசார் மிரட்டி வருகின்றனர்.
சீமானை கைது செய்யவிட மாட்டோம் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன் உள்ளிட்டோர் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Comment