"மூதறிஞர் ஐயா ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார் !" - ஐயா பெ. மணியரசன்.
"மூதறிஞர் ஐயா ஆனைமுத்து அவர்களைச்
சந்தித்து நலம் விசாரித்தார் !"
தமிழ்த் தேசியப் பேரியக்கத்
தலைவர் ஐயா பெ. மணியரசன்.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவரும், பெரியாரியச் சிந்தனையாளரும், சமுகநீதிப் போராளியுமான மூதறிஞர் ஆனைமுத்து ஐயா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை தாம்பரத்தில் ஐயா அவர்களின் மூத்த மகன் தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் இல்லத்தில் இன்று (25.12.2020) பகல் 1.30 அளவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன், மகளிர் ஆயம் தலைவர் ம. இலட்சுமி அம்மா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தென் சென்னை கிளைச் செயலாளர் தோழர் மு.வெ. இரமேசு ஆகியோர் ஐயா ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து நலம் கேட்டறிந்தனர்.
ஐயா அவர்கள் பெம அவர்களையும், புலவர் இரத்தினவேலவன் அவர்களையும் அடையாளம் கண்டு கொண்டு எப்படி வந்தீர்கள் நலமா என்று கேட்டார்கள்.
தம் தந்தையாரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து குணமாகி வீட்டிற்கு அழைத்து வந்த செய்திகளைத் தோழர் பன்னீர்செல்வம் உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
ஐயா ஆனைமுத்து அவர்கள் முழுமையாக நலம் பெற்று மீண்டும் சிந்தனையாளன் இதழ் வழி தமிழர்களுக்குரிய வழி காட்டல் சிந்தனைகளை வழங்க வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தோழர் பன்னீர்ச்செல்வம் அவர்களிடம் தோழர் பெ.ம கூறினார். பின்னர் விடைபெற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment