ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வடவரைத் திணிக்காதே, தமிழரை வஞ்சிக்காதே

 இந்திய அரசே!

" வடவரைத் திணிக்காதே, தமிழரை வஞ்சிக்காதே" ஜூலை 11 கோவையில் முற்றுகை போராட்ட விளக்கத் தெருமுனைக்கூட்டம் ஓசூரில் தொடர்வண்டி நிலையத்தில் இன்று (29 6 22) மாலை 5:30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. 

          நிகழ்விற்கு நகரச் செயலாளர் தோழர் இரா. முருகப்பெருமாள்  தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ஜோக்கிம், நாம் தமிழர் கட்சி சூளகிரி பொறுப்பாளர் செந்தமிழ்ச் சேரன் தோழர்கள் சுப்பிரமணியன், செந்தில் மாறன், மகளிர் ஆயம் செயலாளர்  சுஜாதா, கருக்கம்பட்டி தமிழக உழவர் முன்னணி செயலாளர் சுரேசு உள்ளிட்டோர் உரையாற்றினர்            


          இறுதியாக தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து விளக்க உரையாற்றினார்.

         இந்தத் தெருமுனைக் கூட்ட உரை  இளைஞர்கள் பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.