ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

புதுமண்ணியாற்றங்கரையில் கான்கிரிட் தடுப்புச் சுவர் மற்றும் கான்கிரிட்தளம் அமைக்கக்கூடாது

 மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்  ஒன்றியத்துக்கு உட்பட்ட கடற்கரையை ஒட்டி உள்ள மாதானம், பன்னீர் கோட்டகம், பழையபாளையம், தாண்டவன்குளம், தற்காசு, பழையாறு, கொட்டாய் மேடு போன்ற பகுதிகளில் 30,000ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் புதுமண்ணி ஆற்றாங்கரையில் இரு கரைகளிலும் உள்ள கால்வாய் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் நஞ்சை நிலங்கள் உவர் நிலங்களாக மாறவும் ஆற்று படுகையில் நீர்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகவும் இந்தப் பகுதி முழுவதும் வறண்ட பூமியாக மாறக்கூடிய நிலை ஏற்படும் என்பதாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகளும் பொதுமக்களும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீரானது நிலத்தடி நீரை நம்பி தான் வாழ்கின்றனர் கோடைகாலத்தில் அதாவது புதுமண்ணியாற்றில் நீர் வராத காலத்தில் கைப்பம்பில் வரக்கூடிய நீரானது உப்பாகவும் ஆற்றில் நீர் வரும்போது நிலத்தடி நீர் உயர்ந்து நன்னீராகவும் இருக்கும் மற்ற நேரத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை தான் நம்பி வாழ வேண்டிய சூழல் உள்ளது எனவே புது மண்ணி ஆற்றில் கான்கிரீட் தளம் அமைப்பதால் குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியம் பழையபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் பழைய பாளையம் எல்லைக்கு உட்பட்டபுதுமண்ணியாற்றங்கரையில் கான்கிரிட் தடுப்புச் சுவர் மற்றும் கான்கிரிட்தளம் அமைக்கக்கூடாது என 15.08.2022 சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.