ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"பன்மைவெளி"யின் புதிய நூல்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியீடு!







 "பன்மைவெளி"யின் புதிய நூல்கள் 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியீடு!

=================================


ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் கடந்த ஆகத்து 5 தொடங்கி ஆகத்து 16 வரை நடைபெறுகிற “ஈரோடு புத்தகத் திருவிழா - 2022”-இல், பன்மைவெளியின் புதிய நூல்களின் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது. 


ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிற்றரங்கில் நேற்று (11.08.2022) மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வை, ஆசிரியர் இளையராசா ஒருங்கிணைத்தார். தமிழ்த்தேசியப் பேரியக்க ஈரோடு செயலாளர் தோழர் குமரேசன் முன்னிலை வகித்தார்.  


தோழர் கி. வெங்கட்ராமன் எழுதி, திரு. கீழடிவாணன் மொழி பெயர்த்துள்ள ஆங்கில நூலான “Fighting Global Warming" நூலை மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் வெளியிட, தமிழ்த்தேசியர் திரு. லோகு பிரகாசு பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் ப.பா. மோகன் இந்நூல் குறித்தும், திரு. கீழடிவாணன் நூலாக்கம் குறித்தும் உரையாற்றினர். நிறைவில், தோழர் கி. வெங்கட்ராமன் உரையாற்றினார். 


முனைவர் சுப. உதயகுமாரன் எழுதியுள்ள “திக்கற்றவர்களுக்கு தேசியமே துணை!” நூலை தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வெளியிட, குமாரபாளையம் த.தே.பே. செயலாளர் திரு. வெ. ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் உதயகுமாரன் நூல் குறித்து உரையாற்றினார். 


ஐயா பெ. மணியரசன் எழுதியுள்ள “இந்தியம் என்பது ஆரியமே!” நூலை, பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமாரன் வெளியிட திரு. இரகுநாதன் (சக்தி மளிகை, பெருந்துறை) பெற்றுக் கொண்டார். தோழர் உதயகுமாரன் இந்நூல் குறித்து உரையாற்றினார். 


ஆசிரியர் சு. உமாமகேசுவரி எழுதியுள்ள “எது கல்வி?” நூலை திரு. மூசா ராஜா ஜூனைதி வெளியிட, ஓமியோபதி மருத்துவர் பிரேமா பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.  ஈரோடு ஈ.கே.எம். அப்துல்கனி மதரசா இசுலாமியப் ஆரம்பப்பள்ளி தாளாளர் திரு. ஈ.கே.எம். முகமது தாஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் மணி நூல் குறித்து உரையாற்றினார். ஆசிரியர் உமாகேசுவரி ஏற்புரையாற்றினார்.  


தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ள “இனம் - வர்க்கம் - மதம் - சாதி” நூலை, தோழர் அரசு தாமஸ் வெளியிட, திருமதி. செயலட்சுமி (இயற்கை அங்காடி) பெற்றுக் கொண்டார். தோழர் அரசு தாமஸ் நூல் குறித்து உரையாற்றினார். 


இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், வாசகர்களும் பங்கேற்றனர்.  


மேற்கண்ட அனைத்து நூல்கள் மட்டுமின்றி, ஐயா பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் எழுதிய தமிழ் - தமிழர் - தமிழ்நாடு குறித்த - தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் வெளியீடுகளும், பன்மைவெளி வெளியீடுகளும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் பன்மைவெளி அரங்கு எண் 77இல் 10% கழிவில் கிடைக்கும்! நூல்களை அஞ்சலில் பெற விரும்புவோர் 9840848594 எண்ணுக்கு அழைத்துப் பேசவும். 


நூலை நேரில் பெற - 

பன்மைவெளி,

எஸ்.பி,10/34 - முதல் தளம், மூன்றாவது தெரு,

முதல் பிரிவு, க.க. நகர், சென்னை - 600 078


================================

பன்மைவெளி வெளியீட்டகம்

================================

பேச: 98408 48594, 94439 18095

தொலைப்பேசி : 044 - 2474 2911

================================

முகநூல் : FB.com/panmaiveli

மின்னஞ்சல் : panmaiveli@gmail.com

கீச்சு : https://twitter.com/panmaiveli 

================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.