தமிழே அர்ச்சனை மொழி தமிழரே அர்ச்சகர் பரப்புரை கூட்டம்.
சிதம்பரத்தில் எழுச்சியாக நடைப்பெற்ற தமிழே அர்ச்சனை மொழி
தமிழரே அர்ச்சகர் பரப்புரை கூட்டம்.
கருவறைத் தீண்டாமை தீர்ப்பை முறியடிக்க தமிழ்நாடு அரசே
சட்டம் இயற்று..!
என வலியுறுத்தி தெய்வத்தமிழ்ப் பேரவையின் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று 28-09-2022 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு தெய்வத்தமிழ்ப் பேரவை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே.சுப்ரமணியசிவா அவர்கள் தலைமை வகித்தார்.
வள்ளற் பெருமானார் அருளச்செய்த திருவருட்பா திருப்பாக்களை தயவுத்திரு ஜெயலதபிரதாபன், அருட்பா நாகராஜன் உள்ளிட்டோர் ஓத கூட்டம் இனிதே தொடங்கியது.
தெய்வத்தமிழ்ப் பேரவை ஓதுவார் ஐயா சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.
தெய்வத்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அவர்களும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன்,
வள்ளலார் பணியகத்தின் தங்க.பன்னீர் செல்வம், தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் ஆ.குபேரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்கள்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் க.வேந்தன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார்.
இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைத்தலைவர் தோழர் க. முருகன், பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தெய்வத்தமிழ்ப் பேரவை அன்பர்கள் சரவணக்குமார், கோதண்டபாணி, நடராஜன், பாரதிதாசன், இராதாகிருஷ்ணன், ரவிசந்திரன், துரைராஜ், உமாபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்தத் தோழர் பா.பிரபாகரன், சீர்காழி நகரச்செயலாளர் அரவிந்தன், பேரியக்கத்தின் சிதம்பரப்பகுதி ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அ.கலைச்செல்வன், தோழர்கள் சக்திவேல், அஜய் பிரசாத் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்க தோழர்கள், ஆன்மீக அன்பர்கள், பெண்கள், இளையோர் என பலர் பங்கேற்றனர்
Leave a Comment