பட்டீச்சுரத்தில் தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!
பட்டீச்சுரத்தில் தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!
================================================
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீச்சுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடைகள் உழவர்கள் யூரியா வாங்க சென்றால் கூடுதல் இடுப்பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். வாங்க மறுத்தால் யூரியா கிடையாது என்று சொல்லிவிடுகிறார்கள். மற்றும் டி.ஏ.பி.விலை ரூபாய் 350 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 மாதமாக மாவட்ட ஆட்சியர், வேளாண் உதவி இயக்குநர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த ஒரு பலனும் இல்லை. அதனால் 19.09.2022 அன்று மாலை 6:00 மணியளவில் உழவர்களுக்கு யூரியா எந்த நிபந்தனையும் இன்றி வழங்கவும். டி.ஏ.பி.விலையை குறைக்கவும் தமிழக உழவர் முன்னணி பட்டீச்சுரம் கிளை சார்பில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி கொடுக்க வில்லை. தடை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி பட்டீச்சுரம் கிளை தலைவர் எஸ்.சேகர், தலைமை தாங்கினார். பொருளாளர் செழியன் முன்னிலை வகித்தார், ம.தூயவன் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்கள், பி.பாஸ்கர், கண்ணன், து.சரவணன், பாபு, மாரியப்பன், திருஞானம், தீந்தமிழன் மற்றும் பெருந்திரளாக உழவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக காவிரி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்த நா.வைகறை கோரிக்கை முழக்கம் எழுப்பினார்.
Leave a Comment