ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பனை விதை விதைப்பு விழா!









 பனை விதை விதைப்பு விழா! கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் முருகன்குடி கிராமத்தில் 24/09/2022 இன்று காலை 10 மணி அளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றும் திருவள்ளுவர் தமிழர் மன்றம் சார்பாக மாபெரும் பனை விதை விதைப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்வின் முதல் பனை விதையை செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா கரும்பு கண்ணதாசன் அவர்கள் விதைத்தார். பனை மரத்தின் மூலம் விளையக்கூடிய பொருட்களை மதிப்பு கூட்டல் பற்றி விளக்கை உரை ஆற்றினார் .தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைத் தலைவர் ஐயா க.முருகன் அவர்கள் பனை மரத்தின் மருத்துவ பயன்களைப் பற்றி உரையாற்றினார் .தோழர் மணிமாறன் அவர்கள் பனை விதை விதைப்பு பற்றிசெய்முறை செய்து காட்டினார்.தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் அவர்கள் தமிழ்த்தேசிய மரமே பனைமரம் என்ற கருத்தில் உரையாற்றினார். திருவள்ளுவர் தமிழர் மன்றம் செயலாளர் தோழர் ஞானபிரகாசம் அவர்கள் பனை விதையினை விதைத்தார் .மேலும் தமிழ்த் தேசியப்பேரியக்கத் தோழர்களும் திருவள்ளுவர் தமிழர் மன்ற உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு பனை விதையினை விதைத்தனர்.












 .

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.