முருகன்குடியில் வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா
முருகன்குடியில் வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா
==============================================================
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் முருகன்குடியில் 05.10.2022 அன்று தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வடலூர் வள்ளலார் 200 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு வள்ளலார் பணியகம் நல்லூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஐயா தங்க. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி முருகன் வரவேற்றார்.
தீவளூர் மங்கள அரங்கம் ஐயா சம்மந்தம் ஒளியேற்றி விழாவினை தொடங்கி வைத்து, அனைவருக்கும் உணவு வழங்கினார். நிகழ்வின் துவக்கத்தில் ஐயா செகதாலபிரதாபன் அருட்பா, மனுமுறை கண்ட வாசகம் ஆகிய பாடல்களை பாடினார். பெண்ணாடம் திருக்குறள் மையம் ஒருங்கிணைப்பாளர் ஐயா தா.கோ. சம்மந்தம் வள்ளலார் பற்றிய கருத்துகளை வழங்கினார்.
நிகழ்வில் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் ஐயா கரும்பு கண்ணதாசன், மா. கார்த்திகேயன், அ. செல்வமணி, ச. அன்பரசன், எழில்வேந்தன், கணேசன்,சிலம்பரசன்,சிலம்புச்செல்வி,சசிகுமார் திருவள்ளுவர் தமிழர் மன்ற உறுப்பினர்கள் பி. வேல்முருகன்,மா.மணிமாறன்,தி.ஞானப்பிரகாசம், இரா. அரவிந்த். இரா. அன்புமணி, மகளிர் ஆயம் தோழர்கள் பி. சாந்லெட்சுமி, ம. கனிமொழி, அ. செந்தமிழ்செல்வி, மு. தமிழ்மணி ஆகியார் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்வில் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வினை வள்ளலார் பணியகம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், திருவள்ளுவர் தமிழர் மன்ற பொருப்பாளர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
Leave a Comment