ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழுக்குத் தலைமகன் - பரணிப் பாவலன்


தமிழுக்குத் தலைமகன்
பரணிப் பாவலன்


பரிதியின் மகனாய் புதுவையில் எழுந்து
    பழந்தமிழ் இனத்தின் படையாய் நிமிர்ந்து
உரிமைப் போரில் உதயமாய் உவந்து
    உன்னத மாந்தனாய் வாழ்ந்தான் வளர்ந்தான்


பெரியார் சொன்னதை பாட்டாய்ப் பெயர்த்து
    பொய்யோர் சதையை கண்களால் உரித்து
வரிப்புலி இனமாய் போர்ப்படை சமைத்தான்
    வடவர் இனத்தை அதிலே புதைத்தான்
 
காவிகள், கசடுகள் பார்த்தால் உடனே
    காட்டு வேழமாய் மிதித்து நசுக்குவான்
காவியத் தமிழைக் காதால் கேட்டால்
    காய்ச்சியப் பாலாய் மொண்டு பருகுவான்

குருதிநீர் முடங்கி அடங்கும் வøμயில்
    குன்றாய் நின்றான் தமிழ்க்குலம் காத்தான்
இறுதிநாள் அவனை இறுக்கும் வøμயில்
    இன்தமிழ் வாழ்ந்திட இன்னுயிர் நெய்தான்

உருவிய உடைவாள் உறைக்குள் போடாது
    உறவுகள் வாழ்ந்திட காவலாய் நின்றான்
        பெருகிய பாவலர் படைக்கு; தானே

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.