வெள்ள நிவாரணம் கோரி உழவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ள நிவாரணம் கோரி உழவர்கள் ஆர்ப்பாட்டம்
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் அரசு நிவாரண தொகை கொடுக்க மறுப்பதை கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
24.04.2008 அன்று மாலை து}த்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடந்தது. இவ்வார்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் பெ.மகாராஜன் தலைமை வகித்தார். குரும்பூர் நகரச் செயலாளர் சீ.கர்ணன், நகரத் தலைவர் மு.தியாகராஜன் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு வெள்ள நிவாரணத் தொகையை குத்தகை விவசாயிகளுக்குக் கொடுக்க மறுப்பதைக் கண்டித்தும், ஏக்கருக்கு ரூ.12000 நிவாரணம் கோரியும் து}த்துக்குடி மாவட்ட த.உ.மு. அமைப்பாளர் மு.தமிழ்மணி மற்றும் மு.ராஜரத்தினம், கல்லை க.பெருமாள், சோ.வடிவேலன், த.சின்னத்துரை,
சு.ஜெயராஜ், ம.சொர்ணபாண்டியன், பே.இராசேந்திரன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
முடிவில் ஆ.முத்துப்பாண்டி நன்றி கூறினார். உழவர்கள் திரளாகக் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Leave a Comment