இனி எதைக் கேட்பாய்... - அவையரசன்
இனி எதைக் கேட்பாய்...
அவையரசன்
அணுஉலை கொதிக்க
அமெரிக்கா சென்றாய்
எங்கள் வீட்டில்
கொதிக்கவில்லை
உலை
வயிறு கொதிக்கிறது.
..
அமைதிப் புறாவை
கையில்வைத்து
வேடனிடம் சென்றாய்
அவன் படைத்த விருந்தில்
"இதயமே' ருசி என்றாய்
எங்கே
புறாவும் அமைதியும்...
விழாக்கள் என்றால்
வேட்டுகள் போட்டாய்
வீதிகளை அலங்கரித்த
அவை
வெந்து சிதைந்த
எங்கள்
கந்தகக் குழந்தைகள்...
வேளாண்கடன் தள்ளுபடி
"பட்ஜெட்' போட்டாய்
மண்டையை பிளக்கும்
ஆயிμம், அய்நூறு
"மார்வாடி சேட்'
கடனும், வட்டியும்
தள்ளுபடி உண்டா?
ஆட்சியில் அமர
ஓட்டுக் கேட்டாய்
அரசாங்கம் நடத்த
வரியைக் கேட்டாய்
முதலாளி செழிக்க
நிலத்தைக் கேட்டாய்
புதுக்கட்சிக்காரன்
கோவணத்தையும்
உருவிக் கொண்டான்
கொடி ஏற்ற
இனி
நீ
எதைக் கேட்பாய்?
Leave a Comment