ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நாற்காலி மேடேறிப் பாயும் "தேசிய நீரோட்டம்" - புலவர் க.முருகேசன்


நாற்காலி மேடேறிப் பாயும்


"தேசிய நீரோட்டம்'

புலவர் க.முருகேசன்

பதவிப் பெருமழையில்
தேசிய நீரேட்டம்
பெருக்கெடுத்தது
தேசத்தையே அடித்துச் செல்கிறது
அசோகச் சக்கரம்


ஆணைச் சக்கரமாய் வந்தது
வேடிக்கை மனிதர்களின்
கேளிக்கைப் பொருளானது
அது
சிங்கத்தின் காலடிவிட்டு
தேசத்தை ஆளவந்தது
தேசியக் கொடியில் குடியேறியது
சுழலும் சக்தியற்று
பதவிச் சுழலில்
சிக்கிக் கொண்டது
சனநாயகத்தைப் பிணமாக்கித்
தர்ப்பைப் புல்லில் கட்டிவிட்டனர்
இது
கங்கை நதிக் கலாச்சாரம்
காவிரி நீர் கானல் நீரானது
தேசிய நீர் மட்டும் தேங்காமல் ஓடுகிறது
ஏனெனில் அது
நாற்காலி மேடேறிப் பாய்கிறது.
அடிமைகொண்ட வெள்ளையன்
அணையைக் கட்டி நம்
வயிறைக் குளிμ வைத்தான்
திமிராய்ப் பேசி
சொட்டு நீருமில்லை

 

உச்சநீதி மன்றம்
அச்சத்தில் அமிழ்ந்து போனது
எனினுமிங்கு
தேசிய ரோட்டம்
தேங்காமல் ஓடுகிறது
பாலாறு என்றால்
நீரேது என்கிறான் தெலுங்கன்
வேறேதுவழி பாழாறுதான்
தேசிய நீரேறிப் பாயாதங்கு
ஒக்கேனக்கல் என்றோம்
உனக்கேது தண்ணீ öμன்கிறான்
கன்னடன்
என்னடா தேசமிது?
எங்கள் தேசம்
தமிழ்த் தேசம்
என்றெழுந்தால்
தமிழ்த் தேசிய நீரோட்டம்
தடைபடாமல் ஓடும்
தடம் மாறாமல்
ஆறுகள் ஓடிவரும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.