ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தில்லைப் போராட்டம் - புதிய ஜனநாயகத்தின் அவதூறு - தோழர் கி. வெங்கட்ராமன்.

தில்லைப் போராட்டம்
புதிய ஜனநாயகத்தின் அவதூறு
கி. வெங்கட்ராமன்
அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய ஜனநாயகம்' ஏடு (மே,2008) ஒரு விமர்சனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தில்லைப்பேணிμணிட்டம் குறித்து 'தமிழர் கண்ணோட்டம்' ஏப்ரல் 2008 இதழில் நாம் எழுதியிருந்த செய்திக் கட்டுணிμக்கு எதிர்வினையாக இது வெளியாகி  யிருக்கிறது. தில்லைப் போராட்டத்திற்கு ம.க.இ.க. அணியின் பங்கு பணியைக் குறைத்தோ, மறைத்தோ நான் எதுவும் எழுதவில்லை என்பதை 'தமிழர்  கண்ணோட்டம்' கட்டுரையைப் படித்த நடுநிலை வாசகர்கள் அறிவார்கள். எனவே மீண்டும் அதுபற்றி இப்போது விவாதிக்கப்போவதில்லை. ஆயினும் புதிய ஜனநாயகத்தின் "தெரட்டி்'' கூறியுள்ள சிலவற்றுக்கு மட்டும் உண்மைத் தகவல்களைப் பதிலாகத் தரவேண்டியுள்ளது.

1. சிற்றம்பல மேடையேறி பாடி வழிபடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு ஒன்று கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கறிஞர் நடராசன் என்பவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும், நமக்கும் நேμடி அறிமுகம் கிடையாது. ஆயினும் இப்பிரச்சினையில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை ஆறுமுகசாமி மூலம் அவர் அறிந்திருக்கிறார். வழக்கு தொடர்பாக பேசவேண்டியிருப்பதால் வழக்கு நடக்கும் நாளில் நேரில் கடலூர் வருமாறு ஆறுமுகசாமி மூலம் அழைத்தார். நானும் சென்றேன். அன்று சாட்சிகள் குறுக்கு விசாரணை முடிந்திருந்தது. வழக்கின் நிலைமைகளை விளக்கிய அவர் "இதனை மனித உரிமை வழக்காக உயர்நீதிமன்றத்தில் நடத்த வேண்டியது அவசியம்' என்றார். அப்போது அவர் கையில் விருத்தாச்சலத்தில் தோழர் μணிச்த தலைமையில் நடக்கவிருந்த பொடா எதிர்ப்புக் கருத்தμங்க அழைப்பு இருந்தது. அதனை என்னிடம் காட்டி, "அஇக்குணிμஞர் μணிச்த மூலம் இப்பிரச்சினையை எடுத்துச்  செல்லலாம் எனக் கருதுகிறேன் அஅணிμப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் வழியில் வேறு நல்ல  வழக்கறிஞர்களை வைத்தாலும் சரியே. எப்படி யிருந்தாலும் வழக்கை உறுதியாக நடத்த வேண்டும்" என்றார். "μணிச்த எனக்கு நெருக்கமானவர் தான். அவர் மூலமே நடத்தலாம். பொடா எதிர்ப்புக் கூட்டத்திற்கு பார்வையராக நானும் வருவேன். அங்கு பேசி முடித்துவிடலாம்" என்று நான் கூறினேன். அன்று விருத்தாசலம் வருமாறு ஆறுமுகசாமியிடமும் கூறிவிட்டு வந்தேன். விருத்தாச்சலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் பொடா எதிர்ப்புக் கருத்தμங்கம் தொடங்குவதற்கு முன்பாக அμங்கத்தில் நாங்கள் சந்தித்தோம். ஆறுமுகசாமியை μணிச்தஅக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சுருக்கமாக வழக்கு குறித்துப் பேசினோம். μணிச்த இளைஞர் என்பதால் ஆறுமுகசாமிக்குத் தொடக்கத்தில் சிறு தயக்கம் இருந்தது. அப்போது இவர்களது அமைப்பு பற்றியெல்லாம் ஆறுமுகசாமிக்கு எதுவும் தெரியாது. "உங்களுக்கு அரசு வைத்துத் தரும் இலவச வழக்குரைஞர்களை விட இவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்தாம்" என்று சொல்லி, அஅμது தயக்கத்தைப் போக்கினேன்.

2. இதற்கு சில நாள்கள் சென்று μணிச்தஅம் அஅμது ச€கணிதμரும் சிதம்பμத்திஅ என்னைச் சந்தித்தார்கள். த.தே.பொ.க. தோழரின் உழுவை பராமரிப்பகத்தில் அந்த சந்திப்பு நடந்தது. "அமைப்பில் பேசி விட்டேன். வழக்கையும் இதுகுறித்த இயக்கங்களையும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நாம் கூட்டாக இதன் மீதான இயக்கங்களை நடத்தலாமா?" என தோழர் ராஜீ கேட்டார். "ம.க.இ.க.வுடன் த.தே.பொ.க. கூட்டு இயக்கம் நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் ம.க.இ.க. நடைமுறையில் ஒரு சீர்குலைவு அமைப்பு; மறைமுகமான பார்ப்பனிய அமைப்பு என்பது த.தே.பொ.க.வின் மதிப்பீடு. எனவே கூட்டியக்கமோ, ம.க.இ.க.வுக்கு  துணையாக செயல்படுவதோ சாத்திய மில்லை. நீங்களே உங்கள் வழியில்  நடத்துங்கள்" என நான் தெளிவுபடக் கூறிவிட்டேன். ஆயினும் அதற்குப் பிறகு 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் இப்பிμச்சினை குறித்து நாம் தனியே நடத்திய உண்ணா நிலைப் பேணிμணிட்டங்கள், தெருமுனைப் பரப்புரை இயக்கங்கள், பொதுக் கூட்டம் ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், செய்திகளை ஊன்றி கவனிக்கிற நோக்கர்களும் அறிவார்கள்.

3. திருச்சிற்றம்பல மேடையில்  பக்தர்கள் பாடி வழிபட ம.க.இ.க. போராட்டம் நடத்தியதால் ம.க.இ.க. மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்ற நமது மதிப்பீடு பொய்யாகி விடாது. ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் நிதி பெறும் சில 'தன்னார்வ' அமைப்புகள் கூட உலகமயத்தை எதிர்த்து சில பேணிμணிட்டங்கள் நடத்துவதைப் பார்க்கிறோம். ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. எனவே இந்த அமைப்புகளை மறைமுகப் பார்ப்பனிய அமைப்புகள்; இந்திய ஆளும் சக்திகளுக்கு மறைமுகமாக சேவை செய்யும் சீர்குலைவு அமைப்புகள் என த.தே.பொ.க. மதிப்பிடுகிறது. இண்Oஅணிμ ம.க.இ.க. வின் இந்த அடிப்படை நிலைபாடுகளில் மாறுதல் இல்லை. எனவே நமது அதே மதிப்பீடும் தொடர்கிறது.

 4. வ.சுப. மாணிக்கனார் தலைமையில் தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் பேராடுவதற்கு அதற்கு முன்னால் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதை தீட்சிதர்கள் மறுத்தே வந்தனர். அவர்களது போராட்டத்திற்குகு பிறகே, 1987 முதல் தீட்சிதரில் ஒருவர் பாடுவது என்ற வகையில் €தஅணிμம் ஒலித்தது. இது முதல்கட்ட வெற்றி என்றோம். காலை பூசை முடிவில் ஒருவர் ஒரு பாடல்பாடி அந்த 'சடங்கை' தீட்சிதர்கள் முடிக்கிறார்கள். அதை முனைவர் த.செயராமன் குறிப்பிட்டிருந்தார். இரண்டுமே உண்மைதான். இதில் முμண்பாடு இருப்பது போல் 'தொரட்டி' குதிக்கிறார்.

5. மார்ச் 2 (2008) மாலை காவல்துறை தடியடிக்குப் பிறகு ஆறுமுகசாமி 'அனாதையாக' அமர்ந்திருந்தார் என்று பு.ஜ. த.தே.பொ.க. மீது பாய்கிறது. கைதானது 34 பேர். ம.க.இ.க. பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மீதமுள்ள பலரும் அங்கேதான் இருந்தார்கள். இந்நிலையில் அவரை அனாதையாக விட்டு விட்டதாக நம்மீது தோழர் 'தொரட்டி' பாய்வது வியப்பாக இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?  காவல்துறை ஆறுமுகசாமியைக் கைது செய்யவில்லை. கைதானோர் பட்டியலில் அவரையும் சேர்த்துவிட வேண்டும் என்று ம.க.இ.க.வினர் முயன்று கொண்டிருந்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள நடைமேடையில் அவரை அமர  வைத்திருந்தனர். அருகே சென்னையிலிருந்து ம.க.இ.க. சார்பில் வந்திருந்த வழக்கறஙிஞர் இருந்தார். ஆறுமுகசாமியைக் கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

த.தே.பொ.க. சிதம்பர நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிராகாசமும் நானும் இரவு நீண்ட நேரம் அவர்கள் அருகிலேயே இருந்து சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத் தினார்கள். அதன் பிறகு ஆறுமுகசாமியும் கைது செய்யப்பட்டார்.

5. அதன் பிறகு மார்ச் 12 தொடங்கி நாளதுவரை சிவ நெறியார்கள் தமிழகமெங்கிருந்து த.தே.பொ.க.- தமிழ்க் காப்பணியைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட நாள்தோறும் வருகிறார்கள். திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி மனமுருகி வழிபடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் காலை நேரத்திலேயே வந்து வழிபடவே விரும்புகிறார்கள். தங்கவைப்பது, ஒய்வு நேரத்தில் இரண்டு ஊர்களிலிருந்து வந்து மனநிறைவாக வழிபட முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க நேரத்தை ஒழுங்கு செய்வது, தீட்சிதர்களோடு அவ்வப்போது எழும் உரசல்களை எதிர்கொண்டு நெறிப்படுத்துவது.... போன்ற பணிகளில் த.தே.பொ.க., தமிழ்க் காப்பணி தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிக்கென்று தமிழ்க் காப்பணி சார்பில் 'தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதன் நெறியளாராக தோழர் சிவப்பிரகாசம் இருந்தாலும், வழமையாகக் கோயிலுக்குச் சென்று வழிபடும் இளைஞர்களைக் கொண்டே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் தேசிய இயக்கத்தின் வை.இரா.பாலசுப்பிரமணியன் இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார். தமிழகமெங்குமிருந்து பல சிவனடியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இக்குழுவைத் தொடர்புகொண்டு பாடி வழிபடுவது தொடர்கிறது.

பெரும்பாலோர் காலையில் வழிபட்டுச் சென்று விடுகிறார்கள். ஆம்பூர், திருநெல்வேலி, வடலூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலை8, காலை 10 மணி, மாலை என வெவ்வேறு நேரங்களில் பாடி வழிபட்டதும் உண்டு. தொடக்கத்தில் பதட்டம் இருந்த சூழலில் மேடையில் பாட விரும்பு கிறவர்கள் காவல்துறையை அணுக வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பாளர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் அமைதிக் கூட்டம் நடந்து எழுத்துப்பூர்வமாக செய்து கொள்ளப் பட்டதுதான் நான் குறிப்பிட்ட உடன்பாடு. காலை வேளையைத் தவிர பிற  காலங்களில் பாடமாட்டோம் என்பது அதன் பொருளல்ல என எல்லோருக்கும் புரியும். 'தொரட்டி'க்கு மட்டும் அது புரியவில்லை.

அரசாணைக்கு மாறாக உள்ளூர் காவல்நிலையத்தில் எழுதிக் கொள்ள முடியாது. நாம் அவ்வாறு செய்யவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஏதோ ம.க.இ.க. பெற்றுத்தந்த ஆறுகால வழிபாட்டு உரிமையை ஒரு காலமாக வெட்டிக் குறுக்கிவிட்டதாக த.தே.பொ.க. மீது 'புதிய ஜனநாயகம்' அவதூறு அள்ளி வீசுகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மீதும், வ.சுப. மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள் மீதும் ம.க.இ.க. வசைமாரி பொழிந்தாலும் தில்லைப் பிரச்சினையில்  ம.க.இ.க.வின் பணியை நாம் குறைத்துக் கூறியதே இல்லை. அதேநேரம் "ம.க.இ.க.வின் அரசியலானது சாரத்தில் இந்திய  ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது. இந்துமதம், இடஒதுக்கீடு குறித்த அதன் பார்வை பார்ப்பனியத்திற்குச் சேவை செய்கிறது" என்ற நமது திறனாய்விலும் மாற்றமில்லை.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

2 comments:

  1. //புதிய தமிழர் கண்ணோட்டம்//

    அருண்பாரதி அய்யா.

    புதிய தமிழர் என்றால் யார்?உங்களைப் போன்றாவர்களா?ஆனால் மூஞ்சியை பார்த்தால் புதுசா எதுவும்தெரியலயே.அதே கண்ணறாவி தமிழன் மூஞ்சி தானே தெரிகிறது.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.