பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு


காடு வரை பாடை தூக்கிச் சென்று நீத்தார்க்கு பெண்களே இறுதிச் சடங்கு நடத்திய புதுமை நிகழ்வு திருச்சியில் நடந்தது. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் கவித்துவன். இவரது தாயார் திருமதி மூக்காயி
அம்மாள் கடந்த 16-05-2008 பிற்பகல் திருச்சியில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் மே 17- இல் நடைபெற்றன. மூக்காயி அம்மாளின் உடலை எடுத்துச்செல்ல பாடைக் கட்டுவதிலிருந்து பாடைத் தூக்குவதிலிருந்து சுடுகாட்டில்
இறுதி நிகழ்ச்சிகளை நடத்துவது வரை அனைத்தையும் பெண்களே செய்து முடித்தனர்.

நீத்தார் உடலோடு பெண்கள் வீதித்தாண்டி வரக்கூடாது என்ற பிற்போக்கு சம்பிரதாயத்தை அப்பெண்கள் உடைத்தெறிந்தனர். தோழர் கவித்துவன் மனைவியும்
மகளிர் ஆயத்தின் செயல் வீராங்கனையுமான தோழர் சுகுணக்குமாரி, பெரியார் மகளிர் இயல் மையத்தைச் சார்ந்த தோழர்கள் புவனா, பெரிசியா மற்றும் தோழர் அனுராதா ஆகிய நான்கு பெண்களும் சோ;ந்து எல்லாப் பணிகளையும் செய்து முடித்தனர். "தொடக்கத்தில் உறவினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு பிறகு அவர்களே தமது கருத்தை மாற்றிக் கொண்டு தொடர்ந்து இது போல செய்யுங்கள்" என்று கூறியதாக தோழர் கவித்துவன் தெரிவித்தார்.

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item