ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அல்ஜீரியப் போர் - தமிழ்ஒளி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை)

அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அப்புறம் இரண்டாவது பெரிய அரேபிய தேசம். பரப்பளவில் உலகின் பதினோராவது இடம். 130 ஆண்டுகளாக பிரான்ஸின் காலனியாக இருந்து வந்தது. இந்த அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெற அல்ஜீரியர்கள் 1954-ல் போராடத் துவங்கினார்கள். FLN (National Liberation Front) என்ற அமைப்பு அதற்குத் தலைமை வகித்தது. கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் தங்கள் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். பிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு அதை அடக்க முயற்சித்தது. பொதுமக்களை தாக்குவது சித்தரவதை செய்வது என இராணுவம் ஈடுபட வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது, பொதுச் சொத்துகளுக்கு நாசம் விளைவிப்பது என FLN பதிலடிக் கொடுத்தது. இரண்டுபுறமும் சரிசமமாக வன்முறைகள் கையாளப்பட்டன.

பிரான்ஸ் வேறொரு சதிவேலையும் செய்தது. 1926-களில் அல்ஜீரியாவின் சுதந்திர போராட்ட காலத்தில் போராடிவிட்டு ஓய்ந்துப்போன ‘மெசாலி ஹட்ஜ்’ என்பரைக் கொண்டு MLA (Algerian National Movement) என்ற அமைப்பை உருவாக்கி FLNனுடன் போரிட வைத்தது. தன்னைக் காத்துக் கொள்ள சகோதரர்களுக்குள் அடித்துக்கொள்ள வைப்பது காலனியாதிக்க நாடுகள் காலம் காலமாக பின்பற்றும் வழிமுறைதான். இரண்டும் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டன. FLN-னுக்கும் MLA-வுக்கும் இடையே நடந்தப் போர்களை ’கேஃப் போர்’(Cafe War) என்று அழைக்கிறார்கள்.

பிரான்ஸ் தன் இராணுவத்தைக் கொண்டு பல தாக்குதல்கள் செய்தது. FLN தலைவர்களைத் தேடி பிடித்து கொல்வது, அரேபியர்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி வேலி அமைத்து சோதனைச் செய்த பிறகே வெளியேற அனுமதிப்பது போன்றவற்றைச் செய்தது. FLN உறுப்பினர் என்றால் பிடித்து உள்ளேப் போடுவது மட்டுமல்லாமல் முக்கியமானவர்கள் என்றுத் தெரிந்தால் மரணத் தண்டனை தந்து சுட்டுக்கொன்றார்கள். இந்தச் செயல் பல அல்ஜீரிய இளைஞர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. பலர் விரும்பி FLN-னில் இணைந்தார்கள். தொடக்கத்தில் அமைதியான முறையில் ஒரு தீர்வை எதிர்பார்த்த மக்களிடையே கூட கோபத்தை தூண்டியது. மறைமுகமாகவோ நேரிடையாகவோ FLN-க்கு மக்கள் உதவ துவங்கினார்கள். மற்ற சகோதர அரேபிய தேசங்களின் உதவியுடன் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது.

அல்ஜீரியர்களின் இந்த சுதந்திரப் போராட்டம் பிரான்ஸிலும் இரண்டு விதமான போக்கை தோற்றுவித்தது. அல்ஜீரியாவை பிரான்ஸின் ஆதிக்கத் திற்க்கு உட்பட்ட (பிர)தேசமாக வைத்திருப்பது அல்லது முழுவதும் சுதந்திர நாடாக அனுமதிப்பது என்று இரு தரப்பினர் உருவானார்கள். காலனியாதிக்க எதிர்ப்புணர்வு பரவலாக பரவி வந்த காலமது. இது நடந்தது நான்காவது பிரான்ஸ் குடியரசு (1948-58) ஆட்சிக் காலத்தில்.

பின்பு வந்த சார்லஸ் டி கால்-ஐ அதிபராகக் கொண்ட ஐந்தாவது குடியரசு அல்ஜீரியாவிற்கு சுதந்திரம் வழங்குவது பற்றிய வாக்கெடுப்பு நடத்தியது. அதில் அல்ஜீரியர்கள் தங்களின் சுதந்திரத்தை தேர்ந்தெடுத்தார்கள். பின்பு 1962-ல் அல்ஜீரியா சுதந்திரம் அடைந்தது. ’அகெமத் மென் மெலா’ அதன் முதல் அதிபரானார். இவர் 1956 போராட்டத்தின் போது மற்ற FLN தலைவர்களுடன் கைதானவர். இந்த சுதந்திரப் போராட்டம் 1954-ல் துவங்கி 1962-ல் சுதந்திரம் பெரும் வரை நடந்தது.

படம்:

The Battle of Algiers::

அல்ஜீரியப் போர்

திரைக்கு வந்த வருடம்: 1967

இயக்குனர்: Gillo Pontecorvo.

இந்தப் படம் அல்ஜீரியாவில் பிரான்ஸின் இராணுவச்சிறையில் துவங்குகிறது. ஒரு FLN-ன் உறுப்பினரை பிடித்துவந்து சித்தரைவதை செய்து ’அலி லா பாய்ண்டி’ என்ற FLN தளபதியின் இருப்பிடம் தெரிந்துக்கொண்டு அவனை தேடிச்செல்கிறது. அங்கே அவன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இரக சிய பதுங்குத் தளத்தில் போலியான சுவரை உருவாக்கி சுவருக்கு மறுபுறம் பதுங்கி இருக் கிறான். அவனுடன் அவ னுக்கு உதவிப் பிரிந்த ஒரு சிறு வனும், ஒரு பெண்ணும் மற்றொரு ஆணும் இருக்கிறார்கள். கட்டிடத்தை சுற்றி வளைக்கிறது இராணுவம். இராணுவ அதிகாரி அவனை சரணடையும் படி கேட்கிறார். கதை இங்கே இருந்து பின்னோக்கிச் செல்கிறது.

இந்த ’அலி லா பாய்ண்டி’ என்பவன் ஒரு முன்னால் குத்துச்சண்டை வீரன், போக்கிரி, பல வழக்குகள் அவன் மேல் உண்டு. தொருவில் ஒரு ஏமாற்று வித்தையில் ஈடுபடும்போது பிடிப்பட்டு சிறைச் செல்லுகிறான். அங்கே ஒரு FLN போராளி மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப் படுவதைப் பார்க்கிறான். அதன் பிறகு அவனுக்கு அரசியலில் நாட்டம் வந்து FLN-இல் இணைய முயச்சிக்கிறான். விடுதலை ஆனப்பிறகு அவனை ஒரு பரிசோத னைக்கு உட்படுத்தி FLN-இல் இணைத்துக் கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பல கொலைகள் செய்கிறான். FLN-யின் வன்முறை அதிகரிக்கிறது. இதைக் கண்ட பிரான்ஸ் அரசு தன்னுடைய இராணுவத்தை அனுப்புகிறது. இராணுவம் ’கேஸ்பா’ என்ற அரேபியர்கள் வாழும் பகுதியைச்சுற்றி வேலி அமைத்து FLN உறுப்பினர்களை தேடத் துவங்கிறது. மக்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்ட பிறகே வெளி யேர முடியும், வேலைக்குச் சென்றுவர முடியும். எல்லாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அடையாள அட்டை இல்லாமல் வேலைக்குச் செல்ல முயற்சிக்கும் அப்பாவி மக்களைக் கூட திரும்ப வீட்டுக்கு அனுப்பு கிறார்கள்.

இந்த சோதனைச் சாவடியை சாமார்த்தியமாக மீறிச்சென்று FLN தன் காரியங்களைச் செய்கிறது. கோபம் கொண்ட இராணுவம் அரேபியர்கள் வாழுமிடங்களில் குண்டு வைத்து பல அப்பாவிகளை கொல்லுகிறது. மக்கள் கதறுகிறார்கள், கொதித் தெழுகிறார்கள். தாம் பழிவாங்குவதாக FLN வீரர்கள் மக்களிடம் உறுதித்தருகிறார்கள். பொது மக்கள், பெண்கள் உதவியோடு ’அலி லா பாய்ண்டி’-இன் பொறுப்பில் பழிவாக்கப்படுகிறது. இராணுவம் அடக்குமுறையை கையாள்கிறது. பல நாசச் செயல்களைச் செய்கிறது. எப்படியாவது FLN-னின் தலைவர் களைப் பிடித்து விடவேண்டும் அல்லது கொன்று விட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது.

எவ்வளவு முயன்றும் இராணுவத்தால் முழுமையாக FLN தலைவர்களை பிடிக்க முடிய வில்லை. அதற்கு காரணம் FLN ஒரு விசித்திர அதிகார அடுக்கு முறையில் செயல்படுகிறது. பிரமீடு போன்ற அதிகார அடுக்கு. அதாவது தலைவர்-1 என்பவரின் கீழ் உறுப்பினர்-2 மற்றும் உறுப்பினர்-3 இருப்பார்கள். உறுப்பினர்-2ன் கீழ் உறுப்பினர்4-5 இருப்பார்கள். உறுப்பினர்-3ன் கீழ் உறுப்பினர்6-7 இருப்பார்கள். ஒருவரின் கீழ் இருப்பவர்களுக்கு தனக்கு முன் இருக்கும் அடிக்கின் தலைவர்களைத் தெரியாது. அதாவது உறுப்பினர் 4-5க்கு உறுப்பினர்1 யார் என்றுத் தெரியாது. இரண்டு பேருக்கு ஒரு தலைவர் என்ற முறையில் செயல் பட்டது. இந்த அதிகார அடுக்கு அப்படியே தொடச்சியாக தொ டர்ந்தது. அதனால் இராணுவத்தால் ஒருவனைப் பிடிக்க முடிந்தால் அவனோடு சம்மந்தப்பட்ட இரண்டு நபர்களைத்தான் பிடிக்க முடிந்தது.

இன்னொறு உத்தியையும் FLN பின்பற்றியது. கைதாகும் தன் உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்கு எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கச்சொல்லியது. அதற்குள்ளாக முன் அடுக்கில் உள்ளவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். பின்பு சித்திரவதை தாங்க முடியாமல் உண்மைச் சொன்னாலும் பயன் ஒன்றும் இல்லை. பெரும்பாடுப் பட்டுதான் FLN உறுப்பினர்களைப் இராணுவத்தால் பிடிக்கமுடிந்தது. பல கட்ட தலைவர்களைப் படிப்படியாகப் பிடித்தவர்கள் கடைசியாக மிஞ்சிய தலைவனைப் பிடிக்க முயன்றார்கள். அது ’அலி லா பாய்ண்டி’(அடூடி டூச் கணிடிணtஞு). நம்முடைய கதாநாயகன். பிடித்தவர்களை பெறும் சித்தர வதைக்கு உட்படுத்தி உண்மையை வரவழைத்தார்கள். அப்படி பெறப் பட்ட தகவலைக் கொண்டே ’அலி லா பாய்ண்டி’-ஐ பிடிக்க அவன் பதுங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்கள். கதை இங்கே நிகழ் காலத்திற்கு வருகிறது.

இரகசிய சுவருக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் அவனிடம் இராணுவ அதிகாரி பேசிப்பார்க்கிறார். சரணடையும் படி கேட்கப்படுகிறது. அவன் வெளியே வருவதாக இல்லை. அவனிடம் வெடிகுண்டு இருக் கலாம் என்பதினால் இராணுவம் சுவரை உடைக்க தயங்குகிறது. பலவாறு பேசிப்பார்க்கிறார்கள். அவன் சம்மதிக்காமல் போகவே அந்தச் சுவரில் வெடிகுண்டை பொறித்து விட்டு திரியை பாது காப்பான இடத்திற்கு கொண்டுச் சென்று அவனிடம் மீண்டும் சரணடைய பேசிப் பார்க்கிறார்கள். குண்டை வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். அவன் சரணடைவதாக இல்லை. தன்னுடன் இருக்கும் சிறுவன், பெண் மற்றும் ஆணை வெளியேறச் சொல்லு கிறான். அவர்கள் மறுத்து விடுகிறார்கள். வெளியே இராணுவ அதிகாரி மிரட்டுகிறார். நேரக் கெடு விதிக்கிறார். ஊரே கூடி நின்று இவர்களுக்காக அழுகிறது. நகர் முழுவதும் வீட்டு மாடிகளில் நின்று மக்கள் கதறுகிறார்கள், பிராத்தனைச் செய்கிறார்கள். என்ன நடக்குமோ என்று பதைபதைப்புடன் பார்க் கிறார்கள். கெடு முடிகிறது. இராணுவ அதிகாரி உத்தரவுத் தறுகிறார். மக்கள் கண் முன்னேயே அந்த குண்டு வெடிக்கிறது....

வெடித்து சிதறிய புழுதி அடங்கும் போது, தன் கட்டுப் பாட்டிலிருந்து மீறி கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமியை கடந்துச்செல்லும் இராணுவ அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். FLN னின் தலைமை அழிக்கப்பட்டதாகவும், FLN இனிமேல் கிடையாது என்கிறார் ஒருவர். அதற்கு மற்றவர் இப்போதைக்காவது என்கிறார்.

இரண்டு வருட அமைதிக்குப்பிறகு திடீரென்று ஒரு நாள் மக்கள் வீதிக்கு வந்தார்கள், வந்தவர்கள் முழக்கம் போட்டார்கள். இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான கொடிகள் உருவாக்கப்பட்டிருந்தன. போராட்டம் உருவானது. இதற்கு யார் காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. நாட்டைவிட்டு வெளியேறிய FLN உறுப்பினர்களைக் கேட்டால், அதற்கு நாங்கள் காரணமில்லை என்றார்கள்.

காவல்துறை போராட்டக்காரர்களை அடக்கப்பார்த்தது. கலவரமாகிறது. இராணுவம் வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. மக்கள் இறந்து விழ தயாராகிறார்கள். ஊர் முழுவதும் பெண்கள் போடும் குலவிச்சத்தம் ஆக்கரமிக்கிறது. போராட்டம் பல நாட்கள் நடக்கிறது. இராணுவம் பீரங்கி வண்டி கொண்டு வந்து தாக்குகிறது. பல பேர் மடிந்து விழுகிறார்கள். இரவு முழுவதும் அரேபியர்களின் பகுதியிலிருந்து குலவிச் சத்தம் வந்துக்கொண்டே இருக்கிறது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து நகரே புழுதியாக காட்சியளிக்கிறது.

கடைசி நாள் அன்று ஒரு இராணுவ அதிகாரி ஒலி பெருக்கியை கையில் எடுத்துக்கொண்டு புழுதியால் மூடப்பட்டிருக்கும் அரேபிய பகுதியைப் பார்த்து எரிச்சலுடன் கேட்கிறார்..

‘உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்களுக்கு என்ன தான் வேண்டும்?‘

கொஞ்ச நேர அமைதிக்குப்பின்பு, புழுதிக்கு அந்தப் பக்கத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.

‘சுதந்திரம்... எங்களின் உரிமை‘ என்று.. ஒரு குரல் பல குரலாக வலுக்கிறது. புழுதி கொஞ்சம் கொஞ்சமாக விலக மக்கள் கூட்டம் கோஷமிட்டுக்கொண்டே வருகிறது. பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஆடிக்கொண்டே குரலெழுப்புகிறார்கள். போராட்டம் தொடர்கிறது.

இன்னும் இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு ஜூலை 2, 1962 ஆம் ஆண்டு அல்ஜீரியா சுதந்திரம் பெற்று தனி நாடாகிறது.

படம் இங்கே முடிகிறது.

இந்தப் படம் பாருங்கள். சில கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் சேர்த்து ஒரு போராட்ட வரலாற்றை அப்படியே உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். போராட்டம் என்றால் என்ன என்பது புரியும். தியாகம் எத்துணை பெரியது என்பது புரியும். போராட்டக்களத்தில் அடிபட்டு வந்ததைப்போல் உணர்வீர்கள். இதற்கு முன் போராட்டகளத்திற்கு செல்லாதவர் நீங்கள் என்றால் உங்களைத் தலைகுனியச்செய்யும் இந்தப் படம்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.