சென்னை மெளலிவாக்கம் அடுக்குமாடி விபத்து மீட்பு பணிகளை தோழர் பெ. மணியரசன் பார்வையிட்டார்.சென்னை மெளலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 29.06.2014 அன்று இடிந்து விழுந்தது.

4வது நாளாக இன்றும் இடைவிடாமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன இதுவரை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லவரம்  தலைவர் நல்லன் உள்ளிட்ட தோழர்கள் மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

பார்வையிட்ட போது இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் வாலிபர் ஒருவர் மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக மீட்பு குழுவினர் அவருக்கு திரவ வடிவிலான குளுக்கோஸ் கொடுத்தனர். 

எனினும் மீட்பு குழுவினரால் அவரை உனடியாக மீட்க முடியவில்லை. அவரை உயிருடன் மீட்பதற்காக மீட்பு குழுவினர் மிகுந்த கவனத்துடனும், பொறுமையாகவும் இடிபாடுகளை அகற்றினர். 

சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மாலை 5 மணி அளவில் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். 

உடனடியாக மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து உடல்நிலையை தேற்றினர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related

செய்திகள் 1730935638543750998

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item