ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓசூரில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!


இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஓசூர் இராம் நகரில், இன்று(10.08.2014) மாலை நடைபெற்ற கண்டனத் தெமுனைக் கூட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.செம்பரிதி தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகி தோழர் கு.சக்திவேல், பாதிரியார் திரு. செநாதன், சிவனடியார் திரு. இரவிச்சந்திரன், தோழர் தமிழ்மாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார்.

பெண்களும், குழந்தைகளும் என திரளான தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.