புளியங்குடியில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் புளியங்குடியில், 13.08.2014 அன்று மாலை 3 இடங்களில் ‘சமற்கிருத எதிர்ப்பு’த் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. வாசுதேவநல்லூர் த.தே.பொ.க. அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி தலைமையில் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகிலும், புளியங்குடி நகரச் செயலாளர் தோழர் இசக்கி ஆடும் பெருமாள் தலைமையில் புளியங்குடி காமராசர் சிலை அருகிலும், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.பாண்டியன் தலைமையில், மேலசைகார்பேட்டையிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார்.

Related

புளியங்குடி 6571270593370491758

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item