புலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு!
பெண்ணாடத்தில்...“தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு!
தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிய “தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் - வீரவணக்க நிகழ்வு, 16.05.2015 அன்று, பெண்ணாடத்திலுள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.
மே 16 அன்று மாலை செளந்திரசோழபுரம் தென்னஞ்சோலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தமிழர் நீதிக் கட்சி தலைவர் தோழர் சு.பா. இளவரசன் தலைமை உரை நிகழ்த்த, ஆசிரியர் மு.பழனிவேல் முன்னிலை வகித்தார். மனித நேயப் பேரவை தோழர் பஞ்சநாதன், தமிழர் நீதிக் கட்சி தோழர் செள.ரா. கிருட்ணமூர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்தினர். முருகன்குடி திருவள்ளுவர் தமிழர் மன்றத் தோழர் அ.பெ. இராதாகிருட்ணன் நன்றி கூறினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்ணாடம் கிளைச் செயளாலர் தோழர் கு.மாசிலாமணி, தோழர் அரிகிருட்ணன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் மு. இராமகிருட்ணன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் மு. பொன்மணிகண்டன், தோழர். சி,பிரபாகரன், தோழர் தி. தினேசுகுமார், தோழர். தி. சின்னமணி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், திருவள்ளுவர் தமிழ் மன்றத் தோழர்களும் திரளான தமிழ் உணர்வாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புலவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Leave a Comment