புதுச்சேரி - ஜிப்மர் மருத்துவமனைக் கல்லுரியில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்குக! தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் நடுவண் அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில், 2015-2016ஆம் கல்வி ஆண்டு - இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இத்தேர்வின்போது, நடைமுறையிலுள்ள நடுவண் அரசு சட்டங்களின்படி மண்ணின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்சமான 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை.
எனவே, இதனை கடைபிடிக்க வேண்டுமெனக் கோரியும், அலுவலகத்தில் பணிபுரியும் நிறுவன ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரியும், பெரிதும் தமிழர்களேப் பயன்பெறும் இம்மருத்துவமனையில் தமிழ் தெரியாத வேற்று மொழி தெரிந்த செவிலியர்களே பணியில் அமர்த்தும் நிலையைக் கைவிட்டு, தமிழர்களையே செவிலியர்களாகப் பணியமர்த்த வேண்டுமெனக் கோரியும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், 29.05.2015 அன்று காலை, கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் அமைப்பாளர் தோழர் வேல்சாமி, ஒருங்கிணைப்பாளர் தோழர் வெ. கார்த்திகேயன் உள்ளிட்ட தோழர்கள், இம்மனுவை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரிடம் நேரில் அளித்தனர்.
Leave a Comment