முன்னறிந்து சொல்லும் தமிழ்த் தேசியப் பேரியக்கம்! “பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு இன்னும் ஓர் ஆண்டில் வரும்!”
முன்னறிந்து சொல்லும் தமிழ்த்
தேசியப் பேரியக்கம்! “பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு இன்னும் ஓர் ஆண்டில் வரும்!”
கடந்த ஆண்டு (2014) தமிழர் கண்ணோட்டத்தில்
வெளியான தோழர் பெ. மணியரசன் கட்டுரை!
“பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு இன்னும் ஓர் ஆண்டில் வரும்”
என, கடந்த 2014 செப்டம்பர் 1-15 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில்,
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்
எழுதியிருந்தார்.
“ஆர்.எஸ்.எஸ். – நரேந்திர மோடி ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும்”
என்ற தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையிலிருந்து…
நரேந்திர
மோடி அடால்ப் இட்லர் ஆகிவிட முடியாது. இட்லர் போல் ஆக வேண்டும் என்று மோடி
ஆசைப்படலாம்; ஆனால் அது நடக்காது.
இட்லரைப்
போல் பட்டாளத்தில் பணியாற்றிய படைவீரர் அல்லர் மோடி; பல்வேறு
பலவீனங்கள் கொண்ட நாடாளுமன்ற அரசியல்வாதி இவர்.
இந்தியா செர்மனி
அன்று; டச்சு மொழி பேசும்
ஒற்றைத் தேசிய இனத்தின் தாயகம் செர்மனி. அதன் மரபினம் ஆரியர்; ஆனால்
அதன் தேசிய இனம் செர்மானியர். இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் பல்வேறு தேசங்களின்
இடைக்கால இணைப்பு!
இட்லரின்
நாஜிக் கட்சியைப் போன்றதன்று பா.ச.க. பதவிப்பித்தர்கள், ஊழல்
பெருச்சாளிகள், ஒழுக்கக் கேடர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அரசியல் குழுமம் பா.ச.க.
இட்லரைப்
போல் அனைத்ததிகாரங்களையும் நரேந்திர மோடி பெறுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பாது.
பயன்படுத்தித் தூக்கி எறிவதுதான் ஆர்.எஸ்.எஸ். பண்பு. இப்போதைக்கு ஆர்.எஸ்.எஸ்.
பணம் கட்டியுள்ள பந்தயக்குதிரை நரேந்திர மோடி!
பன்னெடுங்காலத்திற்கு
முன்பே ஆரியர்கள் மேலை ஆரியர், கீழை ஆரியர் என்று இரண்டாகப் பிரிந்துவிட்டனர். செர்மானியர் மேலை ஆரிய
மரபினர். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஆரியப் பிரிவினர் கீழை ஆரிய மரபினர்.
மேலை
ஆரியர்கள் பல்வேறு தேசிய இனங்களாக உருமாறி விட்டனர். ஆனால், கீழை
ஆரியர் பல்வேறு தேசிய இனங்களாகப் படிமலர்ச்சியும் அடையவில்லை; தாமே ஒரு
தனித் தேசிய இனமா கவும் வளரவுமில்லை. வர்ணாசிரம தர்மத்தால் சிதறி, சாரத்தில்
பிராமணப் பிரிவாகச் சிறுத்து, ஓர் உளவியல் இன வடிவமாகப் பல பிரிவுகளில் ஆரியம் உள்ளது. எனவே,
அது நேரடியாக இன அரசியல் பேசாமல் ‘இந்துத்துவா’
என்ற பெயரில் மத அரசியல் பேசு கிறது. அந்த மத அரசியல் ஊடாக ஆரிய இன
அரசியல் பேசுகிறது. ஆனால், இட்லர் நேரடியாக ஆரிய இன அரசியல் பேசினார்.
இவையெல்லாம்
தாம் மேலை ஆரியத்திற்கும் கீழை ஆரியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்.
கீழை
ஆரியத்திற்கென்று ஒரு பார்ப்பனியப் பண்பாடும்- உளவிய லும், அவை
சார்ந்த உத்திகளும் இருக்கின்றன. அந்தக் கீழை ஆரிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.
ஆட்சியாளர்களை
அண்டி நின்று, ஆன்மிகம் பேசி, அரசியல் தந்திரம் பேசி, தனக்கானவர்களாக ஆட்சியாளர்களை வளைத்துக்
கொண்டு தனது சமூக மேலாதிக் கத்தை நிறுவிக் கொள்ளும் உத்தி தான் பெரும்பாலும் கீழை
ஆரியப் பார்ப்பனியத்தின் உத்தி.
ஆனாலும்
பார்ப்பனர்கள் அரச குருவாக இருந்துகொண்டு அரசர் களை இயக்குவார்கள், அரசர்களை
ஆட்டி வைப்பார்கள். வாய்ப்புகள் உருவானால் வாள் சுழற்றும் தள பதிகளாகவும் வலம்
வருவார்கள்.
மராட்டியத்தில்
சித்பவனப் பார்ப்பனர்கள் பேஷ்வாக்களாக-- அதாவது முதலமைச்சர்களாக இருந்து கொண்டு
மன்னர்களை ஆட்டி வைத்தார்கள். அந்த சித்ப வனப் பார்ப்பனப் பிரிவுதான் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் நிரந் தரத் தலைமை!
இப்பொழுது
மன்னராட்சி இல்லை. வாக்குப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கும் தலைவர்கள் ஆட்சி
நடைபெறுகிறது. இது மன்னர் நாயகமும் இல்லை, மக்கள் நாயகமும் இல்லை, தலைவர்
நாயகம்! இந்தத் தலைவர் நாயகத்தில் அவ்வப்போது ஒரு தலைவரை முன்னிறுத்துகிறது
ஆர்.எஸ்.எஸ். அட்டல் பிகாரி வாஜ்பாயி, லால் கிசன் அத்வானி, அடுத்து
நரேந்திர மோடி!
ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க.வுக்கு இப்போது நாடாளுமன்றத்தில்
தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சி நடத்துகிறது.
குசராத்தில்
2002-இல் இரண்டாயிரம் இசுலாமியர்களைக் கொன்று, இந்துத்துவா
வெறியாட்டம் நடத்தி, இந்துமத மக் களை ஒருங்கு திரட்டிக் கொண் டது நரேந்திர மோடி ஆட்சி.
அந்த வெற்றியின் விளைவாக இசுலாமி யர்களை அச்சுறுத்தி, அவர்களையும்
தனது கொற்றத்தின் நிழலில் இழுத்துக் கொண்டது. இதனால் மூன்றாவது முறையாகக் குசராத்
சட்டமன்றத்தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வரானார் மோடி! அத்வானி
குதிரையைவிட மோடி குதிரையே முறுக்கானது, போட்டிக்குத் தகுந்தது என்று முடிவு
செய்தது ஆர்.எஸ்.எஸ். தலைமை.
பாபர்
மசூதியை இடித்து, இந்து பயங்கரவாதத்தைப் பரப்பி, பா.ச.க.
வுக்கு முதல்முதலாக இந்தியாவின் ஆட்சியதிகாரம் கிடைக்கத் தடம் போட்ட அத்வானி
இப்போது கவர்ச்சி இழந்த கிழட்டுக் குதிரை என்பது ஆர்.எஸ்.எஸ். மதிப்பீடு!
நரேந்திர
மோடியை வைத்து, இந்த ஐந்தாண்டுகளுக்குள், அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு ஆரியத்திற்குத்
தேவையான அடிப்படைகளைப் போட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அவசரம் காட்டுகி
றது.
இந்தியாவை
இந்துதேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில்
கோரிக்கை வைத்தார். வர்ணாசிரம தர்மமும் சாதிப் பிரிவுகளும் சமூக வளர்ச் சிக்குத்
தேவை என்று கொள்கை வைத்துக் கொண்டு - அதையும் அண்மையில் மீண்டும் ஒளிவுமறை வின்றி
வெளிப்படுத்திய சுதர்ஸ்சன ராவ் என்ற ஆரியச்சார்பு அரை வேக்காட்டு ஆய்வாளரை இந்திய
வரலாற்று ஆய்வுக்குழுவின் (மிசிபிஸி) தலைவராக்கியுள்ளார் நரேந்திர மோடி.இதே
கருத்துடைய ஆர். எஸ். எஸ்.காரரான தீனாநாத் பத்ராவைக் கொண்டு பள்ளிப்
பாடத்திட்டங்களை அணியப் படுத்த முயல்கிறார் மோடி
ஆர்.எஸ்.எஸ்.
பரிவாரங்களின் ஆங்கில
ஏடுகளில் ஒன்றான “இந்து வாய்ஸ்’’ மும்பையிலிருந்து வெளிவருகிறது. அது நரேந்திர மோடிக்கு இந்துத்துவா
கோரிக்கைகளை வைத்துள் ளது.
1. இந்தியாவுக்குப்
புதிய ரூபாய்த் தாள்களையும் நாணயங் களையும் அச்சிட வேண்டும். அவற்றில் காந்தி
படத்தை நீக்கி விட்டு மாதா லெட்சுமி படத்தை அச்சிட வேண்டும்.
2. சன கன
மனப் பாட்டுப்பாடி முடிந்ததும், “வந்தே மாதரம்’’ என்றும் “பாரத் மாதா கீ ஜே’’ என்றும் ஒவ்வொருவரும் கட்டா யம் முழக்கம் கொடுக்க வேண்டும். அரசு
ஊழியர்களுக்கு இதை கட்டாயமாக்க வேண்டும்.
3. “வந்தே
மாதரம்’’, “பாரத் மாதா கீ ஜே’’ என்று சொல்ல மறுப் பவர்கள், இந்திய அரசுக் கொடியை அவமதிப்பவர்கள்
ஆகியோரின் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறிக்க வேண்டும். அவர்கள் உயிர்
வாழ்வதற்கான உரிமை மட்டுமே இருக்க வேண் டும்.
4. சமற்கிருதப்
பாடசாலை களுக்கு நிதி வழங்க வேண்டும்.
5. “சிறுபான்மையினர்’’
என்ற சொல்லைத் தடை செய்ய வேண் டும்.
6. அயோத்தியில்
மிகப்பெரிய இராமர் கோயில் கட்ட வேண்டும். காசியிலும், மதுராவிலும்
மசூதிகள் உள்ள இடங்களில் இந்துக் கோயில் கள் கட்ட வேண்டும்.
7. பெண்கள்
பாதுகாப்பிற் கென்று கொண்டு வரப்பட்டுள்ள குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தை நீக்க
வேண்டும்.
8. பெண்களின்
உடை என்ன வாக இருக்க வேண்டும் என்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்.
9. இந்துக்
கோயில்கள், இந்து நிறுவனங்கள் எதிலும் அரசு தலை யிடக் கூடாது. அரசு வசம் உள்ள
வற்றை இந்து அமைப்புகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
10. சட்டீஸ்கத்
மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ‘சல்வா
ஜூடும்’ என்ற நிலக்கிழார்களின் தனிப்பட்ட ஆயுதப்படையை அரசு அனுமதித்தது போல,
சில இந்து அமைப்புகள் தங்களுக்கென்று ஆயுதப்படை உருவாக்கிக் கொள்ள
அனுமதிக்க வேண்டும்.
இவை
போன்ற இன்னும் பல கோரிக்கைகள் இருக்கின்றன. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அவ்விதழின்
ஆசிரியர் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் அவ்விதழில்
வெளியிடப்பட்டுள்ளது. (பிவீஸீபீu க்ஷிஷீவீநீமீ - யிuஸீமீ -2014). இக்கடிதம் ஏற்கெனவே தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரியம்
காட்டும் அவசரம் புரிகிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி தொடருமா, தொடராதா
என்ற ஐயம் அவர்களுக்கே இருக்கிறது.
மீண்டும்
பாபர் மசூதி இடிப்புப் பயங்கரவாதம் போல், குசராத் மதப்படுகொலைப் பயங்கரம் போல்
ஏதாவதொன்று பா.ச.க.வினாலோ, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களாலோ அரங்கேற்றப்பட்டால்தான் மறு படியும்
இந்துக்களின் ஒருமுனைத் திரட்சியை உருவாக்க முடியும். சிறுபான்மை மத மக்களை அச்
சுறுத்தி வாக்கு வாங்க முடியும்.
வரக்கூடிய
உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல், பொதுத்தேர்தல்
ஆகிய வற்றில் வெற்றியை ஈட்டுவதற்காக இப்பொழுது சகரன்பூர் கலவரம் போன்ற இந்து
முசுலிம் வகுப்புக் கலவரங்களை பா.ச.க. தூண்டி வருகிறது. இப்படிக் கலகங்களைத்
தூண்டுவதை ஞாயப்படுத்தி, பா.ச.க. வின் அனைந்திந்தியத் தேசிய செயற் குழு உறுப்பினர் சி.டி. இரவி
என்பவர் தமது டுவிட்டரில் வெளியிட்ட செய்தி, கள்வன்
கையும் களவுமாக பிடிப்பட்டது போல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரத் திட்டத்தை அம்பலப் படுத்துகிறது.
சகரன்பூர்
மதக்கலவரம் பற்றித் தமது டுவிட்டரில் எழுதிய சி.டி. இரவி “2002லிருந்து
குசராத்தில் செயல்பட்டு வரும் முன்மாதிரி மட்டுமே கலகக்காரர்களை முஸ்லிம்களைக்
கட்டுப்படுத்தி வைக்கும். அம்மாதிரி நடவடிக்கைகள் பாரதம் முழுவதற் கும் தேவை’’.
அத்வானியைப்
பின்னுக்குத் தள்ளி, நரேந்திர மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ். முடிவு
செய்ததற்குக் காரணம் 2002-இல் குசராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் முசு லிம்கள் இரண்டாயிரம்
பேர் கொலை செய்யப்பட்டதுதான். பா.ச.க.வில் உள்ள இளம் அரசியல் வாதிகள் உயர் பதவிகளை
அடைவ தற்கு ஆர்.எஸ்.எஸ். காட்டியுள்ள வழிமுறை இது தான்!
“இந்துத்துவா
வெறிபிடித்த நரேந்திர மோடி - அமீத்சா குழுவிடம் எல்லா அதிகாரங்களும் குவியட்டும்;
இசுலாமியச் சிறுபான் மையினர், எக்காலத்திலும் எதிரியாய் உள்ள தமிழர்கள்,
சம்மு காசுமீர் மக்கள், வடகிழக்கு மாநிலங் களைச் சேர்ந்தோர்
ஆகியோரை ஒடுக்கி ஒழுங்குபடுத்தட்டும் என் பது ஆர்.எஸ்.எஸ். திட்டம். ஆனால்,
இந்த ஒற்றை நபர் அதி காரக்குவியல் வேறு விளைவுகளை ஏற்படுத்தப்
போகிறது.
அத்வானியையும்,
முரளி மனோகர் ஜோசியையும் உயர் அதிகாரத் தளத்திலிருந்து உருட்டி
விட்டார் மோடி. பா.ச.க.வின் ஆட்சிக்குழு, தேர்தல் குழு ஆகிய வற்றிலிருந்து அவர்களை
நீக்கி விட்டார். அந்தரங்கம் பேசிக் கொள்ளும் குழுவில் ராஜ்நாத் சிங் இன்னும்
இருக்கிறாரா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. உ.பி. சட்டப் பேரவைத் தொகுதிக்கான
இடைத்தேர்தலில் போட்டியிட ராஜ்நாத் சிங் மகனுக்கு வாய்ப்புத் தராமல் ஒரு
முதலாளிக்கு வாய்ப் புத் தந்துள்ளார் மோடி! அங்கேயும் முறுகல்!
அண்மையில்
பீகார், கர்நாடகம், ம.பி., பஞ்சாப் மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த
இடைத்தேர்தலில் 10 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. பீகாரில் லாலு-- நிதீஷ்
கூட்டணி 10க்கு 6 தொகு திகளில் வெற்றி பெற்றது. இரு தொகுதிகளில் முறையே 700, -
400 வாக்குகள் குறைவாகப் பெற்று, இக்கூட்டணி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை
இழந்தது.
எனவேதான்
நாம் சொல் கிறோம், நரேந்திர மோடி இட்ல ராக முடியாது. இந்தியா செர்மனி அன்று. பா.ச.க.
நாஜிக்கட்சி அன்று.
இன்னும்
ஓர் ஆண்டில், பா.ச.க.வின் மேல் மட்டத்தில் குழுச் சண்டை வெடிக்க வாய்ப்புண்டு.
ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி குழுவின் ஆரிய எதேச்சாதி காரத்தை, - சமற்கிருத
- இந்தித் திணிப்பை தமிழினப்பகை அரசி யலை தமிழர்கள் முறியடிக்க நல் வாய்ப்புகள்
உள்ளன என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவை யும் சொல்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ்.
என்பது ஆரியப் படை! பா.ச.க. என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு!
தமிழினத்தின் வரலாற்றுப் பகை ஆரியம்! தமிழ்நாட்டைப் பன்னாட்டு நிறுவனங்களின் முழு
வேட்டைக் காடாக மாற்றும். நரேந்திர மோடியின் பொருளியல் கொள்கை! கொஞ்ச நஞ்சம் இருக்
கும் மாநில உரிமைகளையும் பறித் துக் குவித்துக் கொள்வதுதான் நரேந்திர மோடியின்
திட்டம்!
பதவிப்
போட்டியால் ஆரிய முகாமுக்குள்ளே குத்து வெட்டு நடக்கப்போகிறது. பல்வேறு மாநி
லங்களில் பா.ச.க. வீழ்த்தப்படும்!
எனவே,
ஆர்.எஸ்.எஸ்.- நரேந்திர மோடி ஆரிய ஆதிக்க- இந்துத் துவா அரசியலை
எதிர்த்துத் தமிழ் நாட்டில் நம்பிக்கையோடு போரா டலாம். தமிழ்த் தேசிய மாற்று
அரசியலை வைத்துப் போராடி னால் மட்டுமே பயன் உண்டு. வெறும் நரேந்திர மோடி எதிர்ப்பு
மறுபடியும், காங்கிரசுக்கோ அல்லது தமிழகக் கங்காணிக் கட்சிகளுக்கோதான் வாய்ப்புகளை
வழங்கும்!
ஏனெனில் இந்துத்துவா என்பது வெறும் மதவாதம்
மட்டு மல்ல. ஆரிய இனவாதமும் ஆகும்.
தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி ஆரிய எதேச் சாதிகார அரசியலின் ஒரே மாற்று, தமிழ்த்
தேசியம் மட்டுமே!
Leave a Comment