ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வட அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில்...உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு! பெ. மணியரசன் பங்கேற்றுப் பேசுகிறார்..!

வட அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில்...உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்றுப் பேசுகிறார்..!

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும், வட அமெரிக்காவிலிருந்து பாடுபட்டு வரும் “உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization, Inc) - வரும் 08.10.2016 அன்று, தனது வெள்ளி விழா மாநாட்டை நடத்துகிறது.

வட அமெரிக்கத் தலைநகரமான வாசிங்டன் அருகிலுள்ள, விர்ஜினியா மாகாணத்தின் - ஆல்டியில் உள்ள மெர்செர் இடைநிலைப் பள்ளி அரங்கில், (MERCER MIDDLE SCHOOL AUDITORIUM, 42149, GREENSTONE DRIVE, ALDIE, VIRGINIA 20105 - USA, (NEAR WASHINGTON, D.C's DULLES INTERNATIONAL AIRPORT), அக்டோபர் 8 - காரி (சனி) அன்று, காலை 9.30 முதல் மாலை 8.30 மணி வரை இம்மாநாடு நடைபெறுகின்றது.

மாநாட்டில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு, தமிழர் உரிமைகள், வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும், தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவு உள்ளிட்ட பல தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

மாநாட்டில், மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழ்நாட்டிலிருந்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று சிறப்புப் பேச்சாளர்களாக உரையாற்றுகின்றனர்.

மாநாட்டிற்கு, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி, உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் கோ. சுந்தர்ராசன், நடிகர் திரு. சத்தியராஜ், தமிழிசைக் கலைஞர் திரு. புட்பவனம் குப்புசாமி உள்ளிட்ட பலரும் காணொளி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் இல்லை என்றும், எனினும் இருக்கைகளுக்கு முன்பதிவு அவசியம் என்றும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். முன்பதிவு மேற்கொள்ள பின்வரும் இணையப் பக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.