ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நாளை (03.11.2016) - குடந்தையில்...காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசுக்கு எதிராக - தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம்

நாளை (03.11.2016) - குடந்தையில்...காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசுக்கு எதிராக - தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசுக்கு எதிராக - தமிழர் ஒத்துழையாமை இயக்கம் குறித்த விளக்கக்கூட்டம், குடந்தையில் நாளை (03.11.2016) மாலை நடைபெறுகின்றது.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமை தாங்குகிறார்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. எம். தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. த. மணிமொழியன் ஆகியோர் விளக்க உரையாற்றுகின்றனர்.
கூட்டத்தில், தமிழின உணர்வாளர்களும் உழவர் பெருமக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.