சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்! தமிழ்த் தேசிய நூல்களின் அரங்கம். . . !

சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்! தமிழ்த் தேசிய நூல்களின் அரங்கம். . . !
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி - BAPASI) சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை புத்தகக்காட்சி, 40ஆவது ஆண்டாக வரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், 2017 சனவரி 6 தொடங்கி சனவரி 19 வரை நடத்தப்படுகின்றது.

நான்காம் ஆண்டாக, இவ்வாண்டும் ”தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” புத்தகக் காட்சியில் பங்கேற்கிறது. அரங்கு எண் 118, தமிழர் கண்ணோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் அரங்கில், தோழர் பெ. மணியரசன், தோழர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் எழுதிய தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் வெளியீடுகளும், பன்மைவெளி வெளியீடுகளும் கிடைக்கும். தமிழ்த் தேசிய நூல்கள் ஒருங்கிணையும் நூல் அரங்காக, இவ் அரங்கு அணிமாகி வருகின்றது.
தமிழ் மொழி, தமிழினம், தமிழ்த்தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர் பண்பாடு - வரலாறு குறித்த பல்வேறு நூல்கள் இவ் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகளுடன், இவ் அரங்கின் நூல்கள் - உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்!
வாருங்கள் !

அரங்கு எண் - 118
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்


அன்புரிமையுடன் அழைக்கிறது!

பன்மைவெளி வெளியீட்டகம்
பேச: 98408 48594, 76670 77075

Related

சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம்! 5866591281764694844

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item