ஆரியத்தை வீழ்த்துவோம்! பீட்டாவை வெளியேற்றுவோம்!!சல்லி கட்டு தடை தகற்போம்!!! தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் . . .
ஆரியத்தை வீழ்த்துவோம்! பீட்டாவை வெளியேற்றுவோம்!!சல்லி கட்டு தடை தகற்போம்!!! தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் . . .
சல்லிகட்டு தடையை நீக்க வலியுருத்தியும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் சல்லிகட்டு தடை நீக்க அறப்போராட்டம் நடத்திய மக்களின்மீது தடியடி நடத்தி கொடுமை புரிந்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலுயுறுத்தியும் இன்று (18.01.2017) காலை 11.00 மணியளவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் சாணூரப்பட்டியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார், ஆர்ப்பட்ட நோக்கங்களை வலியுருத்து ஒன்றியச் செயலாளர் ஆ. தேவதாசு, மற்றும் மகளீர் ஆயம் மையகுழு உறுப்பினர் ம. இலட்சுமி ஆகியோர் உரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ. கருணாநிதி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலே. இராமசாமி ஆகியோர் பங்கேற்றனர் ஆண்களளும், பெண்களுமாக திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.
தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி நன்றி நவின்றார்.
#WeDoJallikattu
#SaveJallikattu
#TamilsBoycottGovtOfIndia
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment