ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இன்று புதுச்சேரியில் முப்பெரும் விழா. பெ. மணியரசன் பங்கேற்பு..!

இன்று புதுச்சேரியில் முப்பெரும் விழா. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்பு..!
தனித்தமிழ் நூற்றாண்டு விழா, தனித்தமிழ் அறிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்களின் 83ஆம் அகவை விழா, “தமிழ்மாமணி” துரை. மாலிறையன் படைத்துள்ள “எழுச்சித் தமிழ் இயக்கம்” நூல் வெளியீடு ஆகியவற்றை இணைத்து, புதுச்சேரியில் இன்று (27.01.2017) முப்பெரும் விழா நடைபெறுகின்றது.

உலகத் தமிழ்க் கழகம் மற்றும் உலகத் தமிழர் விழிப்புணர்வு இயக்க அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இவ்விழா, புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள மங்கலாட்சுமி நகர் - மங்கலட்சுமி திருமண அரங்கில், மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் இந்நிகழ்வுக்கு, உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி பொறுப்பாளர் திரு. கோ. தமிழுலகன் தலைமை தாங்குகிறார். தமிழ்த்திரு. கி.ச. புனிதவதி வரவேற்கிறார்.

திருவாளர்கள் கதிர்முத்தையன், புதுவை வேலா, தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நிறைவில், “தனித்தமிழும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விழா சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.