ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் - சென்னையில் வெளியீடு!

ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் - சென்னையில் வெளியீடு!
தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி அவர்கள் எழுதியுள்ள “நானும் எனது நிறமும்” - தன் வரலாற்று நூல், 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் மகா அரங்கில், 12.03.2017 மாலை நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழீழ உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் திரு. தஞ்சை இராமமூர்த்தி,  தோழமை வெளியீடு திரு. கு. பூபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் திலகவதி அவர்கள் நூலை வெளியிட, தமிழின உணர்வாளர் திரு. வி.கே.டி. பாலன் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார். தொழில் முனைவர் திரு. சா. பெருமாள், புலவர் இரத்தினவேல், தொழில் முனைவர் திரு. சு. இராமச்சந்திரன் ஆகியோர் நூல்படி பெற்றனர்.
எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் மு. களஞ்சியம், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், நூலாசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர். விரைவில், தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.


நன்றி!
விழாக் குழு,

பேச: 9841949462.
முகநூல்: www.fb.com/oviar.pugazhenthi
ஊடகம்: www.kannotam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.