ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் வெளியீடு!

ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் வெளியீடு!
தமிழீழ ஆதரவு – தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி அவர்கள் எழுதியுள்ள “நானும் எனது நிறமும்” - தன் வரலாற்று நூல், வரும் 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்படுகின்றது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் ஞாயிறு (12.03.2017) மாலை நடைபெறும் இவ்விழாவுக்கு, தமிழீழ உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமை தாங்குகிறார். முன்னதாக, நிழல் ஆசிரியர் திரு. ப.தி. அரசு வரவேற்கிறார்.

எழுத்தாளர் திலகவதி அவர்கள் நூலை வெளியிட, தமிழின உணர்வாளர் திரு. வி.கே.டி. பாலன், கவிஞர் செவ்வியன், தொழில் முனைவர் திரு. சா. பெருமாள், புலவர் இரத்தினவேல், தொழில் முனைவர் திரு. சு. இராமச்சந்திரன் ஆகியோர் நூல்படி பெறுகின்றனர்.

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் மு. களஞ்சியம், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். நிறைவில், நூலாசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார். தோழமை வெளியீடு திரு. கு. பூபதி நன்றி நவில்கிறார். தோழர் க. அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார்.

அவ்வப்போது நிகழும் சமூக அவலங்களுக்கு எதிர்வினையாக தனது ஓவியங்கள் மூலம் பதில் அளித்த ஓவியரின் உணர்வையும், அப்போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தமிழீழப் பயணம் உள்ளிட்ட பல செய்திகளையும் இந்நூலில் தன் வரலாற்றுப் போக்கில் ஓவியர் புகழேந்தி அவர்கள் பதிவு செய்துள்ளார். 472 பக்கங்களுடன் ரூபாய் 350 மதிப்புள்ள இந்நூல், விழா அரங்கில் ரூபாய் 300-க்கு சலுகை விலையில் விற்பனையாகிறது.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்!

நன்றி!
விழாக் குழு,

பேச: 9841949462.
முகநூல்: www.fb.com/oviar.pugazhenthi
ஊடகம்: www.kannotam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.