நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் சென்னையில் கருத்தரங்கம் - கலந்துரையாடல்!
நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் சென்னையில் கருத்தரங்கம் - கலந்துரையாடல்!
தமிழ்நாடு வாழ்நாள் சிறையாளர் கூட்டமைப்பு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில், “வாழ்நாள் சிறையாளர் சீரமைப்பு, மறுவாழ்வு, உரிமைகள் மற்றும் இந்தியாவில் தண்டனை குறித்த பார்வை” என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
நாளை (2017 சூலை 1) - காரிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. காலின் கன்சால்வஸ், சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. திரு. தியாகராசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், உரிமைத் தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாரிவேந்தன், பாரி இராமசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment