நாளை (22.08.2017) நடைபெறவிருந்த உச்ச நீதிமன்ற வழக்குப் பட்டியலிலிருந்து காரணம் ஏதுமின்றி காவிரி வழக்கு நீக்கம்!

நாளை (22.08.2017) நடைபெறவிருந்த உச்ச நீதிமன்ற வழக்குப் பட்டியலிலிருந்து காரணம் ஏதுமின்றி காவிரி வழக்கு நீக்கம்!
நாளை (22.08.2017), உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்றம் 2இல், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காவிரி வழக்கு, திடீரென்று காரணம் ஏதுமின்றி விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு - தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்காமல் விலை போய்விட்ட நிலையில், காவிரி வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கோரி, காவிரி உரிமை மீட்புக் குழு உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்பி வரும் நிலையில், காவிரி வழக்கு இவ்வாறு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காவிரி வழக்கு விசாரணையை உடனே நிறுத்தக் கோரி, கீழ்க்காணும் பக்கத்தின் வழியே ஆர்வலர்களும், உணர்வாளர்களும் உச்ச நீதிமன்றத்துக்கு தொடர்ந்து வேண்டுகொள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.

தமிழ் மக்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு, பிறரையும் கையெழுத்திட வலியுறுத்திட வலியுறுத்தி, நம் உணர்வை உச்ச நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்த இவ்வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் என அன்புரிமையுடன் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Related

வேண்டுகோள் 1396534465076416873

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item