தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக 29.06.2017 அன்று பிற்பகல் மதுரையில் காலமானார்.
திரு. பழ. நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலில் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திரு. பரந்தாமன், தமிழ்த்தேசியக் களத்தில் தொடர்ந்து செயலாற்றி வந்தவர்.
கடந்த 2002ஆம் ஆண்டு செயல்லிதா ஆட்சியில் திரு. பழ. நெடுமாறன், மருத்துவர் தாயப்பன், சுப. வீரபாண்டியன், சாகுல் அமீது, பாவாணன் ஆகியோரோடு பரந்தாமன் அவர்களும் பொடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்வேன்" என்று கூறினார். பொடா சிறையில் அடைக்கப்பட்டு, 525 நாட்களுக்குப் பிறகே பிணையில் விடுதலையானார்.
கடைசியாக, கடந்த சூன் 26ஆம் நாள் (2017), மதுரையில் "மக்கள் கண்கானிப்பகம்" ஒருங்கிணைத்து நடத்திய, சித்திரவதைக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில், அவர் உரையாற்றினார்.
30.06.2017 அன்று அவர் சொந்த ஊரான மானாமதுரையில் எவ்வித சடங்குகளுமின்றி, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்க்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர்கள் கரிகாலன், புருசோத்தமன், வழக்கறிஞர் அருணாச்சலம் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.
தன் வாழ்வின் இறுதிவரை தமிழ்த்தேசிய இலட்சியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த "தமிழ்த்தேசியப் போராளி" கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com
Leave a Comment