தஞ்சையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்!
தஞ்சையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்!
தமிழ்த்தேசியத்தின் போர் வாளாக வெளி வந்து கொண்டுள்ள மாதமிருமுறை இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - இதழின் படிப்பு வட்டம் சார்பில், தஞ்சையில் 08.12.2017 அன்று திறனாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது.
தஞ்சை பெசண்ட் அரங்கில், 08.12.2017 வெள்ளி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழர் கண்ணோட்டத்தின் நீண்டநாள் வாசகரும், மூத்த வழக்கறிஞருமான தஞ்சை அ. இராமமூர்த்தி தலைமை தாங்குகிறார். திரு. பெ. பூங்குன்றன் வரவேற்கிறார்.
முனைவர் கி. அரங்கன், கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், பேராசிரியர் வி. பாரி, தோழர் க. செம்மலர் ஆகியோர் திறனாய்வுரை நிகழ்த்துகின்றனர்.
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர் தோழர் கி. வெங்கட்ராமன், ஆசிரியர் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர் ஆகியோர் விளக்கவுரையாற்றுகின்றனர். நிறைவில், திரு. கு. அப்பணமுத்து நன்றி கூறுகிறார்.
நிகழ்வல், தமிழர் கண்ணோட்டம் வாசகர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்!
=====================================
முகநூல் : fb.com/tkannottam
=====================================
ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்
=====================================
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இணையத்தில் படிக்க - www.kannotam.com
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப்
படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !
கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-
ஆண்டு கட்டணம் - ரூ. 350 /-
மாதம் இருமுறை என 24 இதழ்கள்
ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும்.
மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /-
மாதம் இருமுறை என 72இதழ்கள்
மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.
ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /-
மாதம் இருமுறை என 120 இதழ்கள்
ஐந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /-
மாதம் இருமுறை என 240 இதழ்கள்
பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!
தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!
நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்! பார்க்க: www.KANNOTAM.com
=====================================
கண்ணோட்டம் இணைய இதழ்
=====================================
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594
Leave a Comment