ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஏப்ரல் 27 - கல்லணையில் கூடுவோம்!

ஏப்ரல் 27 - கல்லணையில் கூடுவோம்!
காவிரி உரிமையை மீட்க - உறுதி ஏற்பு ஒன்று கூடலை, வரும் ஏப்ரல் 27 அன்று கல்லணையில் - காவிரி உரிமை மீட்புக் குழு நடத்துகிறது.

இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு, தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய், காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்ப் பேரரசன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையில் ஏப்ரல் 27 வெள்ளி காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஒன்றுகூடலில் - தமிழின உணர்வாளர்களும், உழவர் பெருமக்களும் பெருந்திரளாக வர வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.