திருச்சி பாரத மிகுமின் ஆலைக் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள டிஏவி பள்ளி நிர்வாகத்தின் ஆதிக்க ஆணவப் போக்கை கண்டித்து முற்றுகைப் போராட்டம்
திருச்சி பாரத மிகுமின் ஆலைக் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள டிஏவி பள்ளி நிர்வாகத்தின் ஆதிக்க ஆணவப் போக்கை கண்டித்து
முற்றுகைப் போராட்டம்
================================
திருச்சி பாரத மிகுமின் ஆலைக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள டிஏவி பள்ளி நிர்வாகத்தின் தமிழ் மொழி அழிப்பு நடவடிக்கையின் தொடக்கமாக வணக்கத்திற்குப் பதில் அங்கு படிக்கும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நமஸ்தே என்று சொல்ல சொல்லும் ஆரியத்துவ அடாவடி போக்கையும், மாணவர்களுக்கான படிப்புக்கட்டணக் கொள்ளையை யும்,
தாறுமாறான
பாடப்புத்தக விலை ஏற்றத்தையும் கண்டித்து இன்று (28-06-2022, செவ்வாய்) காலை டிஏவி பள்ளி வளாக வாசல் முன்பு அனைத்திந்திய மாணவர் சங்கத்துடன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றுமுள்ள அமைப்புகள் பங்குபெற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முற்றுகைப் போராட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பாக தோழர்கள் திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன், திருவரம்பூர் நகரச் செயலாளர் தோழர் வீ.பாஸ்கர், தோழர் மு. தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் கேச.இனியன், திரு அ.மனுவேல், திரு சத்தியமூர்த்தி, தோழர் கென்னடி, தோழர் ராசா, தோழர் அருண், தோழர் பால்ராஜ், தோழர் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வார்ப்பட்டத்திற்குப் பிறகு பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வருவதாக ஒத்துக்கொண்டுள்ளது.
Leave a Comment