தமிழர் வணிகர் நடுவம் தொடக்கம் மற்றும் செந்தமிழ் முகவாண்மை இரண்டாம் ஆண்டில் தடம் பதிக்கும் நிகழ்ச்சி:
செந்தமிழ் மின்பொருள் பழுது நீக்கம் உரிமை சி. பிரகாசு அவர்கள் தலைமை தாங்கினார்.
செந்தமிழ் மோட்டார் பழுது நீக்கம் உரிமை க. ராமச்சந்திரன், செந்தமிழ் மின்பொருள் பழுது நீக்கம் தோழர் தி.ஞானப்பிரகாசம், கற்பக விநாயகர் உணவகம் சக்திவேல், திருவள்ளுவர் கலைக்குழு தி.சின்னமணி, செந்தமிழ் முகவாண்மை உரிமை மா. மணிமாறன் ,செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஆலோசகர் தோழர் க.முருகன் ஆகியோர் வணிகத்தில் உள்ள இடர்பாடுகளை விளக்கிக் கூறினர் தமிழர்கள் எப்படி வணிகத்தில் நிலைத்து நிற்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினர்.
நன்றி உரை : இரா .அன்புமணி
Leave a Comment