காந்தி பிறந்த நாள் கிராம சபை கூட்டம் – பட்டீச்சுரம்
காந்தி பிறந்த நாள் கிராம சபை கூட்டம் – பட்டீச்சுரம்
====================================
தமிழக உழவர் முன்னணி, பட்டீச்சுரம்.
====================================
உழவர் பெருமக்களுக்கு வணக்கம், 02.10.2022 இன்று காலை 11:00 மணிக்கு பட்டீச்சுரம் ஊராட்சி மன்ற வளாகத்தில், பட்டீச்சுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். தமிழக உழவர் முன்னணி பட்டீச்சுரம் சார்பில் தலைவர் எஸ்.சேகர், செயலாளர் ம.தூயவன், துனைச் செயலாளர் ரெத்தினசங்கர், செயற்குழு உறுப்பினர் கோ.அன்புச்செழியன், எஸ்.கே.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் பொருளில் மின்சார திருத்தச் சட்டம் 2020 ரத்து செய்ய வேண்டும் என்று பொருளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு, ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதாக அறிவித்தார். ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மற்றும் வேளாண்துறை சார்ந்து அதன் அதிகாரிகள் கலந்து கொண்டு அரசு திட்டங்கள் பற்றி விளக்கினார்கள்.
Leave a Comment