ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம், கிடைக்காரர்கள் கூட்டமைப்பு, சித்த மருத்துவர்கள் மற்றும் மரபு மருத்துவர்கள் கலந்துரையாடல் கூட்டம்

 

தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம், கிடைக்காரர்கள் கூட்டமைப்பு, சித்த மருத்துவர்கள் மற்றும் மரபு மருத்துவர்கள் கலந்துரையாடல் கூட்டம் 21.1.2023 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு



மதுரை காந்தி அருங்காட்சியகம் ஆண்ட்ரூஸ் குடிலில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தமிழ் நாடு மேய்ச்சல் சமூக  கூட்டமைப்பைச் சேர்ந்த திரு.இளஞ்சென்னியன் நெறிப்படுத்தினார்.


செந்தமிழ் மரபு  வழி வேளாண் நடுவம் அமைப்பாளர் முருகன்குடி முருகன், மலைமாடுகள் சங்கத் பொறுப்பாளர் முருகன் , தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் த.வெ.நடராசன், சித்த மருத்துவர் விஜய் விக்கிரமன், கால்நடை சித்த மருத்துவர் முனைவர் புண்ணிய மூர்த்தி , தொழுவம் ஆய்வாளர் பேராசிரியர் கபிலன், நம்மாழ்வார் பயிற்சி மையம் நிலக்கோட்டை வெற்றிமாறன் ,சிதம்பரம் வண்டல் மண்குழு ,பொறுப்பாளர் திரு.சுரேஷ் குமார், அரியலூர் 'வனம்' ரவி, மரபு மருத்துவ சங்கப் பொறுப்பாளர் சிவகங்கை சண்முகராசா, ஊடகவியலாளர் திவ்யபாரதி உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.


இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


1. தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவித்து தமிழர் மரபு வேளாண்மையை பாதுகாத்து வளர்க்க உயிர்ம வேளாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.


2, அதே போல், கிடை மாடுகள் ஆடுகள் வளர்ப்போர் வாழ்வை மேம்படுத்த மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நல வாரியம் நிறுவ வேண்டும்.


3.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து மேய்ச்சலுக்கு பயன்படுத்திக் கொள்ள உறுதி செய்ய வேண்டும்.


4, காடுகளில் கிடை, ஆடுமாடுகள் மேய்ப்பதற்கும், மூலிகை தாவரங்களை திரட்டி சொந்தமாக பயன்படுத்திக் கொள்ளவும் வனத்துறை விதித்த தடையை நீக்க வேண்டும்.


5. சித்த மருத்துவ பல்கலைக் கழகம், எய்ம்ஸ் சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் ஆகியவற்றை நிறுவ தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன் சித்த மருத்துவத்தை வளர்த்து மேம்படுத்த உரிய கொள்கையை உருவாக்க வேண்டும்.


6. இக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 மார்ச் 7 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மரபு உழவர்கள், கிடைக்காரர்கள், சித்த மருத்துவர்கள் ஒன்றிணைந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.