தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்வு - ஈகியருக்கு வீரவணக்கம்!
நவம்பர் 1 தமிழர் தாயக நாள் இன்று 01.11.2023 கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் முருகன்குடி மேட்டுத் தெருவில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு தோழர் அரா. கனகசபை தலைமை தாங்கினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கொடியை துணைத் தலைவர் தோழர் க. முருகன் அவர்கள் ஏற்றினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா. மணிமாறன், நல்லூர் ஒன்றியத் தலைவர் தோழர் பிரகாசு ஆகியோர் தமிழர் தாயக நாள் குறித்து பேசினர்.
இந்நிகழ்வில் பேரியக்கப் பொறுப்பாளர்கள், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழ்நாட்டு உரிமைகள் மீட்க உறுதியேற்கப்பட்டது.
Leave a Comment