ஊடகவியலாளர்கள் அழைப்புக் கடிதம்
ஊடகவியலாளர்கள் அழைப்புக் கடிதம்
விடுநர்
க. அருணபாரதி,
துணைப் பொதுச் செயலாளர், த.தே.பே.,
எண்: 12/6, “பன்மைவெளி”, முதல் தளம்,
நியூ பங்காரு காலனி முதல் தெரு,
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு,
சென்னை - 600 078.
பெறுநர்
உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்,
அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்,
சென்னை, தமிழ்நாடு.
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,
இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து - அருணாச்சலப் பிரதேசம் – மிசோரம் - மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க - மறுக்க “உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும், கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிகழ்வுக்கு, தங்கள் ஊடகத்தின் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அனுப்பி செய்தி சேகரித்து துணை நிற்குமாறு, தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
தோழமையுடன்,
க. அருணபாரதி
துணைப் பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச - 98419 49462, 98408 48594
Leave a Comment