ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர; பால்ராஜ் திடீர; மாரடைப்பால் 20.05.2008 அன்று காலமானார;. பிரிகேடியர; பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மரபுவழிப் படையணியான சார;ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதலாவது கட்டளைத் தளபதி ஆவார;. 1993 ஆம் ஆண்டு வரையும் 1995-1997 ஆம்
ஆண்டு காலப் பகுதிகளிலும் அவர; அப்பொறுப்பை வகித்தார;. தமிழர;களின் போரியல் திறமையை உலகுக்கு அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றியவர;. அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பு+ரில் பிரிகேடியர; பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்னார; மற்றும் மணலாறு களமுனைகளில் அவர; தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர;.
 
இது தொடர;பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்புப்படி 21, 22, "அபாரமான துணிவும், அசுர
வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாக படை நகர்த்தும் ஆற்றலும், கட்டுக்குலையாத குறி தவறாத செயற்பாடுகளுமாக பால்ராஜ் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள் எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதே நேரம் எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித் தந்தன. பிரிகேடியர் பால்ராஜ் எம்மை விட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து
இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எரிந்து கொண்டிருப்பான்" என 21-05-2008 அன்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
 
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு 'புதிய தமிழர் கண்ணோட்டம்' வீரவணக்கம் செலுத்துகிறது.

1 comment:

  1. ஒரு பெரிய தளபதியாக வெற்றி வாகை சூடிய போதும் மிகவும் எளிமையாக,இனிமையாக எல்லோருடனும் பழகுபவர்.
    உடலிலே 18 தோட்டாக்கள் இருந்த போதும் உள்ளத்தில் அன்பு மட்டுமே கொண்டவர்.
    சரளமாகச் சிங்களம் பேசி,சிங்கள ராணுவ வீரர்களே மதித்து,மரியாதை செய்த வரலாற்றைக் கொண்டவர்.
    உடல்,உணர்வு,உழைப்பு எல்லாம் தமிழினத்திற்கே என்று வாழ்ந்து தலைவரின் இதயத்தில் அன்புத் தம்பியாக வாழ்வதே அவரது பெருமை.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.