வேட்டி விவகாரம் : பணிந்தது மட்டைப் பந்து மன்றம்


வேட்டி கட்டியோரை அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு மட்டைப் பந்து மன்றத் தலைவரும் சர்வதேச மட்டைப் பந்து வாரியத் தலைவருமான என். சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மட்டைப் பந்து மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி கட்டி வந்ததற்காக நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதனைக் கண்டித்து மட்டைப் பந்து வாரியத்திற்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றது.

நேற்று சட்டசபையிலும் எதிரொலித்த இப்பிரச்சனை வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் இருப்பது உடை தொடர்பான எதேச்சதிகாரம்; இப்படி தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதா கடுமையாக எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச மட்டைப் பந்து தலைவர் என். சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

தமிழக முதல்வரின் கருத்தையும், தமிழக அரசின் முடிவையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

Related

செய்திகள் 5584360778644579752

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item