ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காங்கிரசும் பா.ச.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!


‘‘சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, எல்லா மாநிலங்களிலும் இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகள் ‘சமஸ்கிருத வார’த்தைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டபோது, தமிழ்த் தேசியம் பேசும் புரட்சியாளர்கள் எங்கே போனார்கள்?” என்று கேள்வி கேட்டு, காங்கிரசுக் கட்சியின் முன்னணித் தலைவரான திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், 03.08.2014 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழில் எழுதியிருந்த கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தார். 

அவரது இக்கூற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ் இந்து நாளேட்டிற்கு எழுதிய கடிதம் இன்று வெளியாகியுள்ளது. 

அது வருமாறு:

‘‘சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, எல்லா மாநிலங்களிலும் இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகள் ‘சமஸ்கிருத வார’த்தைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டபோது, தமிழ்த் தேசியம் பேசும் புரட்சியாளர்கள் எங்கே போனார்கள்?” என்று பீட்டர் அல்போன்ஸ் கேட்டுள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, சமூக வலைதளங்களில் இந்தியைத் திணிக்கும் முடிவை மேற் கொண்டபோது, அதற்கு எதிராகத் தமிழ்த் தேசியர்கள் வலுவாகக் குரல் கொடுத்தனர். இப்போதும்கூட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழகமெங்கும் ஆகஸ்ட் 7 முதல் 13-ம் நாள் வரை ‘சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்’ கடைப்பிடிக்கும் என அறிவித்துள்ளது. ஆனால், இதை யெல்லாம் செய்யாமல், எங்களைக் கேள்வி கேட்கும் பீட்டர் அல்போன்ஸ் சார்ந்திருக்கும் காங்கிரஸ், சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது?

இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதில் முந்தைய காங்கிரஸுக்கும், இன்றைய பாஜக கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதில் மட்டுமல்ல, காவிரிச் சிக்கல், மீனவர் சிக்கல், தமிழீழச் சிக்கல், பெட்ரோல் விலை உயர்வு, அந்நிய முதலீடு என எல்லாச் சிக்கல்களிலும் இவ்விரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவையே எனத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

எங்களைப் பொறுத்த அளவில், பாஜக முன்வைக்கும் ஹிந்து ராஷ்டிரமும் சரி, நீங்கள் எதிர்பார்க்கும் அப்பழுக்கற்ற ராமராஜ்யமும் சரி, கேடு விளைவிப்பவையே!“

(காண்க: தமிழ் இந்து, 05.08.2014)

இணைய இணைப்பு: 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.